Site Logo mobile
Search Icon
Mobile Gif
Articles

திருச்சியில் STEM Park என்ற ஒரு கல்வி பூங்கா

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி முன்னெடுப்பான STEM Park என்ற ஒரு கல்வி பூங்காவைப் பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம். திருவானைக்காவில் இருந்து கொள்ளிடம் செல்லும்பொழுது, கொள்ளிடத்திற்கு முன்னால் இடதுபுறமாகவும், கொள்ளிடத்தின் தென்கரையிலும் உள்ளே செல்லும்பொழுது யாத்ரி நிவாஸிற்கு முன்பாகவே வருகிறது. இந்த பூங்கா Sir CV Raman STEM Park எனப் பெயரிடப்பட்ட இந்த பூங்கா ஒரு காரணப்பெயரைக் கொண்டுள்ளது.

STEM என்ற ஆங்கில எழுத்துக்களின் முதல் எழுத்துக்களின் விரிவாக்கமே இப்பூங்காவின் காரணத்தை எடுத்துக் கூறுகிறது. Science, Technology, Engineering and Mathemetics ஆகியவற்றின் முதல் எழுத்துக்களை வைத்து சர்வபள்ளி STEM Park என திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பெயர் வைத்திருக்கிறது.

இந்தப் பூங்கா வாரத்தின் அனைத்து நாட்களிலும் இயங்குகிறது. நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு 25 ரூபாயும், சிறியவர்களுக்கு 15 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இந்த நுழைவு கட்டணத்தின் மூலம் உள்ளே நுழைந்தபின், அறிவியல் சார்ந்த பல காட்சிகள் இங்கே காட்சிப்படுத்தப்பட்டிருக்கும், குழந்தைகளுக்கு அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் கணிதம் ஆகியனவற்றைப்பற்றி விளையாட்டாக கற்றுக் கொள்ள போதுமான வாய்ப்பு இங்கே இருக்கிறது. இயற்பியல், கணிதம் போன்ற பாடங்கள் கற்க இங்கே வாய்ப்புள்ளது. நம்மை நாமே தூக்கி கொள்ளும் முறை, தொலை தூர காணொளிகள் போன்ற பல விளையாட்டுகள் குழந்தைகளுக்காக இங்கே காத்திருக்கின்றன.

இதன் மூலம் குழந்தைகள் விளையாட்டாக பாடங்களை கற்றுக்கொள்ள முடியும். அதோடுமட்டுமல்லாமல் இந்த பூங்காவில் கோளரங்கமும் உள்ளது. இந்த கோளரங்கத்துக்கு கட்டணமாக பெரியவர்களுக்கு ₹75ம், சிறியவர்களுக்கு ₹50ம் வசூலிக்கப்படுகிறது. இதில் விண்வெளி சார்ந்த தரவுகள் திரையிடப்படுகின்றன. அதுவும் வானத்தைப் பார்த்தவாறே காண்பது போல் இங்கு திரை அமைந்து இருப்பதால் இது பலரை ஈர்க்கிறது. இந்த கோளரங்கம் இல்லாமல் பள்ளிக் குழந்தைகளுக்கான சிறப்புத் திரையரங்கும் உள்ளது. அதற்கான கட்டணம் ₹30 மட்டுமே. அங்கே குழந்தைகளுக்கான கற்றல் கிடைக்கிறது

இப்படி பல கற்றல்களை ஒரே இடத்தில் கற்றுக் கொள்ள இங்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும் இங்கே Virtual Reality எனப்படும் மெய்நிகர் காட்சிகள் தொழில்நுட்பத்தின் உதவியால் காட்சிப்படுத்த த்தயாராகிக் கொண்டிருக்கிறது. Virtual Reality விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும். அவற்றின் மூலம் வானவியல், உயிரியல்,

புவியியல், விலங்கியல் போன்ற தலைப்பில் காட்சிகள் இருக்கும். ஒவ்வொரு தலைப்பிலும் 5 காட்சிகள் இருக்கும். உதாரணமாக வானவியலில் சந்திராயன் பற்றிய காட்சியை நாம் தேர்ந்தெடுத்தால், சந்திராயன் எவ்வாறு சென்று இறங்கியது என்ற காட்சியை மெய்நிகர் காட்சியில் அழகாகக் காணலாம். மேலும் ஹரப்பா மொகஞ்சதாரோவின் வரலாறு, டைனோசர் காட்சிகள் போன்றவற்றையும் மேலும் பல காட்சிகளையும் Virtual Reality காட்சியில் கண்டுகளிக்கலாம்.

இந்த காட்சி விரைவில் துவங்கப்பட உள்ளது. இந்த பூங்கா கொள்ளிடம் ஆற்றுக்கு நேர் எதிரே உள்ளது இயற்கைச்சூழலில் அழகாக அமைதுள்ளது. இங்கு மக்கள் தங்களது குழந்தைகளை அழைத்துச் சென்று விளையாட்டாகவும், பொழுதுபோக்காகவும் பாடங்களை கற்பிக்க பூங்கா வழிவகுக்கிறது. இதைப்பற்றி தெரிந்துகொண்டவர்கள் நிச்சயமாக ஒரு நாள் குழந்தைகளை அழைத்துச் செல்லலாம்.

தொகுப்பாளர் தமிழூர் கபிலன்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *