திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பரோபரியாய் சுற்றித்திரியும் தெருநாய்களின் எண்ணிக்கையினை கட்டுப்படுத்தும் நோக்கில், பரோபரியாக சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து இம்மாநகராட்சிக்குட்பட்ட ஶ்ரீரங்கம், அரியமங்கலம், பொன்மலை மற்றும் கோ.அபிஷேகபுரம் பகுதிக்குட்பட்ட நான்கு மையங்களில் கருத்துடை அறுவை சிகிச்சை செய்து ரேபீஸ் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இம்மாநகராட்சிக்குட்பட்ட 65 வார்டுகளிலும் பரோபரியாக சுற்றித்திரியும் தெருநாய்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கும் பணிகள் தனியார் நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்டதில், 43767 தெருநாய்கள் உள்ளதாக அறிக்கை பெறப்பட்டுள்ளது. இதில் தற்போது வரை 29565 தெருநாய்களுக்கு கருத்துடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 34565 தெருநாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி போடும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

இம்மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பரோபரியாக சுற்றித்திரியும் வெறிபிடித்த மற்றும் அடிப்பட்ட நாய்கள், வயதுமுதிர்வின் காரணமாகவும், நோய்வாய்பட்ட தெருநாய்களை பராமரிக்கும் பணிகளை மேற்கொள்ள கோரி மாண்பமை உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின்படி, அரசு அலுவலகங்கள் கல்வி நிலையங்கள்

மருத்துவமனைகள், பஸ் நிலையங்கள் ரயில் நிலைய பகுதிகளில் பரோபரியாக சுற்றித்திரியும் வெறிபிடித்த நாய்கள், அடிப்பட்ட நாய்கள், வயதுமுதிர்வு மற்றும் நோய்வாய்பட்ட நாய்களை பிடித்து அங்கிருந்து அப்புறப்படுத்தி அவற்றிற்கு கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறிநாய் தடுப்புபூசி செய்தபின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஶ்ரீரங்கம், அரியமங்கலம்,

பொன்மலை மற்றும் கோ.அபிஷேகபுரம் பகுதிக்குட்பட்ட நான்கு மையங்களின் அருகில் புதிய பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு மைய கட்டிடங்கள் கட்டும் பணியினை தலா ரூ.30.00 லட்சம் மதிப்பீட்டில் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் திரு.லி. மதுபாலன் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments