கழகத் தலைவர் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின் 72 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தெருமுனை கூட்டம். திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின் பெயரில் கிழக்கு மாநகரம் மார்க்கெட் பகுதி கழகம்18 மற்றும் 18 (அ) வட்டக் கழகங்களின் சார்பில் அழங்கநாதபுரம் தாராநல்லூர் மெயின் ரோட்டில் மாபெரும் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
மேலும் இந்த பொதுக்கூட்டத்திற்கு மார்க்கெட் பகுதி கழகச் செயலாளர் ஆர் ஜி பாபு அனைவரையும் வரவேற்றார்.18 -வது வட்டச் செயலாளர் சிலம்பரசன் மற்றும் 18 (அ) வட்டக் கழக செயலாளர் பாண்டியன் ஆகியோர் தலைமைவகித்தனர்.மேலும் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக தலைமை கழக பேச்சாளர் போடி காமராஜ் கிழக்கு மாநகரக் கழக செயலாளர் மு.மதிவாணன்இளம் பேச்சாளர் அலி மாஸ் அலிஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
மேலும் கூட்டத்தில் இறுதியில் 18 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சண்முகப்பிரியா நன்றி கூறினார்.இக்கூட்டத்தில் மாநகர அவைத்தலைவர் நூற்கான், மாநகரத் துணைச் செயலாளர்கள் பொன்செல்லையா சரோஜினபொதுக்குழு உறுப்பினர் ரப்பாளர்கள் உள்ளாமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் கூட்டத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments