திருச்சி பெட்டவாய்த்தலை தலைப்பிலிருந்து எலமனூர் கடைமடை வரை புது அய்யன் வாய்க்கால் மூலம் ஆயிரத்து 600 ஏக்கர் பாசனம் பெறக்கூடியது. புது அய்யன் வாய்க்காலில் நில அளவைகள் மூலம் நில அளவீடு செய்து ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும்.வாய்க்காலின் இருபுறமும் சுவர் கட்ட வேண்டும். மக்கள் தொடர்ந்து குப்பைகளையும் கொட்டியும் கட்டங்களையும் கட்டி வாய்க்காலை மூடி வருவதாக குறிப்பிட்டனர் .

உடனடியாக புது அய்யன் வாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்றி கடைமடை விவசாயத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல போடப்பட்ட ஒப்பந்தத்தை நிறைவேற்ற கோரி விவசாயிகள் முக்கொம்பு உதவி பொறியாளரிடம் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது முதல் கட்ட போராட்டம் எனவும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டங்களை நடத்தப்படும் என விவசாயிகள் குறிப்பிட்டனர்.

தற்போது காவிரியில் தண்ணீர் ஓடியும் புது அய்யன் வாய்க்காலில் தண்ணீர் வராமல் உள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டி விவசாயிகள் மனு கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn







Comments