திருச்சியில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கிட வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர் அமைப்பினர் போராட்டம்!!

திருச்சியில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கிட வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர் அமைப்பினர் போராட்டம்!!

திருச்சியில் தங்கி பயிலும் மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு 5ஆயிரம் உதவித்தொகை வழங்கிடவும், அரசின் உதவி தொகையை முறையாக வழங்க வலியுறுத்தியும் மாணவர் அமைப்பினர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்பாட்டம் நடத்தினர்.

https://youtu.be/KHZ3W-BpWV0
Advertisement

கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களிலிருந்து வந்து திருச்சியில் உள்ள சட்டக்கல்லூரி மற்றும் ஏனைய கல்லூரிகளில் பயின்றுவந்த மாணவ, மாணவியர்கள் தங்கியிருந்த வீடுகளில் எவ்வித முன்னறிவிப்பின்றி அவர்களின் பொருட்களை சாலையில் வீசியெறிந்து வீட்டைவிட்டு அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள வீட்டின் உரிமையாளர்களின் செயலை கண்டித்தும், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் மற்றும்

திருச்சியில் தங்கி பயிலும் வெளிமாநில, மாவட்ட மாணவர்களுக்கு உதவித்தொகையாக மாதம் 5ஆயிரம் ரூபாய் வழங்கிடவேண்டும் மற்றும் அரசின் உதவி தொகையினை முறையாக வழங்க வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.