திருச்சி மாவட்டம் துறையூர் பகுதிகளில் உள்ள பள்ளிக்கூடங்கள் கோடை விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டது. துறையூர் மதுராபுரி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அரசு வழிகாட்டுதலின்படி வகுப்பறைகளை சுத்தம் செய்து இன்று திறக்கப்பட்ட பள்ளியில் 30 மாணவர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்

தலைமை ஆசிரியர் சாமிக்கண்ணு ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் பள்ளி திறக்கப்பட்ட பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகளை மலர் கொடுத்தும் இனிப்புகள் வழங்கி இன் முகத்துடன் வரவேற்றார். பள்ளி குழந்தைகள் மீண்டும் பள்ளி திறந்தது மகிழ்ச்சி அடைந்து தங்கள் நண்பர்களை

மீண்டும் சந்திப்பதில் பேர் ஆனந்தம் கொண்டனர். மேலும் வரவேற்ற ஆசிரியர் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் ஆசிரிய பெருமக்கள் உடன் இருந்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF



Comments