Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மாணவ/மாணவிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் கீழ்கண்ட மாவட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

மாணவர்களுக்கான விளையாட்டு விடுதிகள் : மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, இராமநாதபுரம், உதகமண்டலம், விழுப்புரம், என்.எல்.சி.பள்ளி – நெய்வேலி, அரசு மேல்நிலைப்பள்ளி- புதூர் – சென்னை, செல்வம் மேல்நிலைப்பள்ளி – நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. 

மாணவியருக்கான விளையாட்டு விடுதிகள் : ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி, நேரு உள்விளையாட்டரங்கம் – சென்னை, பாரதி வித்யாபவன் – திண்டுக்கல், ஈரோடு, செல்வம் மேல்நிலைப்பள்ளி – நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி சென்னை, ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கம். திருச்சி (ஸ்ரீரங்கம்) மற்றும் திருநெல்வேலி.

மாணவியர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி 

 சென்னை, ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கம் மற்றும் ஈரோடு மாணவ/மாணவியர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி சத்துவாச்சாரி, வேலூர்.

மேற்காணும் விளையாட்டு விடுதிகளில் உள்ள விளையாட்டுகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 7-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு, 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு சேர்க்கையும் முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 6-ம் வகுப்பு, 7-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு ஆகிய வகுப்புகளில் சேர்க்கையும் மாணவ/மாணவியர்களுக்கு அண்ணா விளையாட்டரங்கில் மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் வரும் (24.05.2023) அன்று காலை 7.00 மணியளவில் நடைபெறவுள்ளது.

மாணவர்கள் : 1. தடகளம் 2. இறகுப்பந்து 3.கூடைப்பந்து 4. குத்துச்சண்டை 5. கிரிக்கெட் 6. கால்பந்து 7. வாள்சண்டை 8. ஜிம்னாஸ்டிக்ஸ் 9. கைப்பந்து 10. ஹாக்கி 11. நீச்சல் 12. டேக்வோண்டோ 13. கையுந்துபந்து 14.; கபாடி 15. மேசைப்பந்து 16. டென்னிஸ் 17. ஜுடோ 18. ஸ்குவாஷ் 19. வில்வித்தை 20. பளுதூக்குதல்

மாணவியர்கள் : 1. தடகளம் 2. இறகுப்பந்து 3.கூடைப்பந்து 4. குத்துச்சண்டை 5. கால்பந்து 6. வாள்சண்டை 7. கைப்பந்து 8. ஹாக்கி 9. நீச்சல் 10. டேக்வோண்டோ 11. கையுந்துபந்து 12. கபாடி 13. டென்னிஸ் 14. ஜுடோ 15. ஜிம்னாஸ்டிக்ஸ் 16. ஸ்குவாஷ் 17. வில்வித்தை 18.பளுதூக்குதல் 19. மேசைப்பந்து மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் உள்ள மாணவஃமாணவியர் (2023-2024) ஆம் ஆண்டு விளையாட்டு விடுதி மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையத்தில் சேர்வதற்கான படிவங்களை 

றறற.ளனயவ.வn.பழஎ.in என்ற இணையதள முகவரியில் (23.05.2023) மாலை 5:00 மணிக்குள் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், அண்ணா விளையாட்டரங்கம் திருச்சிராப்பள்ளி (தொலைபேசி எண் 0431-2420685) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *