திருச்சி புதுக்கோட்டை சாலையில் மாத்தூர் அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 2000 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளிக்கான பாதை அரசின் பாதை என வருவாய்த்துறை அதிகாரிகள் கையகப்படுத்தினர். தற்பொழுது பள்ளியின் உள்ளே மாணவர்கள் படித்து வரும் நிலையில் வாசலில் பெரிய பள்ளத்தை தோண்டி வருகின்றனர். உள்ளே பயிலும் மாணவர்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தினர்.
காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சியில் மழை பெய்து வரும் நிலையில் தொடர்ந்து ஜேசிபி வாகனங்களை வைத்து பெரிய பள்ளங்களை பள்ளியின் முன் தோண்டும் வழியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
மேலும் இது தொடர்பாக அதிகாரிகளை விசாரித்த பொழுது ஊரணி பகுதி இதை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று தகவல் தெரிவித்தனர்.
ஆசிரியர்கள் திருச்சி புதுக்கோட்டை சாலையில் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆயிரம் மாணவர்கள் பள்ளி உள்ளே பயந்து வரும் நிலையில் பள்ளியின் வெளியே பெரிய பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால் பள்ளி மாணவர்கள் எப்படி வீடு திரும்புவார்கள் என ஆசிரியர்கள் தொடர்ந்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments