திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 2021-2022-ஆம் கல்வி ஆண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளதால், மாணவர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் பெற்றவுடன் வேலைவாய்ப்புத்துறை இணைய தளமான www.tnvelaivaaippu.gov.in –ன்மூலமாக தங்களது கல்வித்தகுதியினை பதிவு செய்து கொள்ளலாம்.
ஏற்கனவே 10-ஆம் வகுப்பு பதிவு செய்த மாணவர்கள் 12-ஆம் வகுப்பு கல்வித்தகுதியை கூடுதல் பதிவாகவும், 10-ஆம் வகுப்பு மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவினை புதிய பதிவாகவும் மேற்கண்ட இணையதளம் மூலமாகவோ, “இ-சேவை” மையங்கள் மூலமாகவோ, வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலமாகவோ பதிவு செய்து கொள்வதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வரும் மாணவர்கள் தங்களது அசல் கல்வித்தகுதி சான்றிதழ்கள், சாதிச்சான்று, குடும்ப அட்டை, ஆதார் அடையாள அட்டை மற்றும் பழைய வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வருகை புரிந்து பதிவு செய்து கொள்ளலாம் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார், தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…    https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a  
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO



            
            
            
            
            
            
            
            
            
            


Comments