நேற்று (25.11.2025) மாலை ஸ்ரீரங்கம் பஞ்சகரை ரோடு செக் போஸ்டில் இருந்து வடக்கு வாசல் நோக்கி செல்லும் பஞ்சகரை இணைப்புச் சாலையில் திடீரென பெரிய பள்ளம் உருவாகியது. இந்தச் சாலை பொதுமக்கள் பெரும்பாலும் பயன்படுத்தும் முக்கிய பாதையாகவும், தற்போது சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பயணம் செய்யும் வழியாகவும் உள்ளது.
கொள்ளிடக்கரை ஓரம் அமைந்துள்ளதால் மண் அரிப்பு காரணமாக பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இதுகுறித்து உடனடியாக திருச்சி மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறையினர் சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, மண் அரிப்பு காரணம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
மேலும், இந்தப் பாதையில் பள்ளி வாகனங்கள் மற்றும் குழந்தைகள் அதிகமாகப் பயணம் செய்வதால் விரைவான பராமரிப்புபணிகள் மேற்கொள்ளும்படி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments