ஸ்வப்னா தங்க கடத்தல் விவகாரம் - திருச்சியில் 2 பிரபல நகைக் கடைகளில் 6 மணி நேர சோதனை!

ஸ்வப்னா தங்க கடத்தல் விவகாரம் - திருச்சியில் 2 பிரபல நகைக் கடைகளில் 6 மணி நேர சோதனை!

கேரளாவை சேர்ந்த ஸ்வப்னா தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக திருச்சியில் ஏற்கனவே பெரிய கடைவீதியில் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்து வந்தனர்.

தேசிய புலனாய்வு முகமை உத்தரவின் பேரில் இந்த சோதனை இரண்டு நகைக் கடைகளிலும் நடைபெற்று வருகிறது. 15 பேர் கொண்ட சுங்கத்துறை அதிகாரிகள் குழு சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

இந்நிலையில் திருச்சி என் .எஸ் .பி சாலையில் உள்ள பிரபல இரண்டு நகைக்கடைகளான ஜோஸ் ஆலுக்காஸ் மற்றும் மங்கள் அன்ட் மங்கள் ஆகிய இரண்டு நகை கடைகளில் திருச்சி சுங்கத் துறை அதிகாரிகள் 6 மணி நேரமாக சோதனை செய்து வந்தனர்.

Advertisement

கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொச்சியில் 400 கிலோ தங்கம் சிக்கியது தொடர்பாகவும் ,கடத்தல் தங்க மங்கை ஸ்வப்னா கடத்தல் தங்க விவகாரம் தொடர்பாகவும் இரண்டு நகைக் கடைகளில் உள்ள ஆவணங்கள் மற்றும் தங்க விற்பனை இருப்பு குறித்த அனைத்து தகவல்களையும் சோதனையில் எடுத்துள்ளனர்.

https://youtu.be/KHZ3W-BpWV0
Advertisement