இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் ஸ்ரீரங்கம் தாலுக்கா துணைக்கிளை2025-2028 ஆண்டுக்கான புதிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அறிமுக விழா பதவி ஏற்பு விழா கடந்த ஞாயிறு கிழமை 13/07/2025 பீரீஸ் ரெசிடென்சியில் நடந்தது.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டஇந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட செயலாளர் M.ஜவஹர் ஹசன் அவர்கள் உறுப்பினர்களுக்கு பதவிபிரமாணம் செய்து வைத்து அடையாள அட்டைகளை வழங்கினார்மாவட்ட பொருளாளரும் அனைத்து தாலுக்கா கிளை அமைப்பாளருமான Dr.R.இளங்கோவன் அவர்கள்
ஸ்ரீரங்கம் தாலுக்கா துணை கிளை நிர்வாகிகளைஅறிமுகம்செய்துவைத்தார்.தொடர்ந்து மாவட்ட கிளையின் சார்பாக. ஸ்ரீரங்கம் தாலுக்கா துணை கிளை நிர்வாகிகளின் பெயர் பட்டியல் மற்றும் ஒப்புதல் ஆணை வழங்கப்பட்டது.நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட ஜமால் முகம்மது கல்லுரி முதல்வர் ஜார்ஜ் அமல ரெத்தினம்,,வட்டார கல்வி அலுவலர் மருதநாயகம், தலைமை ஆசிரியர் பெட்ரா, தமிழ் துறை பேராசிரியர் ஜாகீர் உசேன் ,கணிதத் துறை பேராசிரியர் பிரசன்னா ஆகியோர் நிர்வாகிகளுக்கு வாழ்த்துரை வழங்கினார்கள்.
மேற்கண்ட நிகழ்வில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி ஸ்ரீரங்கம் தாலுக்கா துணைக் கிளை சேர்மேன் ஆக A.K.S. சீனிவாசன் அவர்களும்,துணை தலைவராக S. முருகையன் அவர்களும் துணை சேர்மன் ஆக V.பாஸ்கரன் அவர்களும்,செயலாளராக பெ.அய்யாரப்பன் அவர்களும், இணை செயலாளர்களாக
A.தீனதயாளன்,R.மணிகண்டன், அவர்களும், பொருளாளராக P.கரும்பாச்சலம் அவர்களும், செயற்குழு உறுப்பினர்களாக L.லோகநாதன், R.யோகேஷ், R.பாஸ்கர்,L.மோகனசுந்தரம் அவர்களும்,ஆலோசனை குழு உறுப்பினர்களாக G.சீத்தாராமன்,V.பாலமாணிக்கம்,V.தியாகராஜன்,G.மோகன்ராஜ்,V.முத்து கிருஷ்ணன் அவர்களும் ரெட் கிராஸ் சொசைட்டியின் உறுதி மொழி ஏற்று பதவி ஏற்று கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
Comments