ஸ்ரீரங்கம் அரங்கநாச்சியார் திருக்கோயிலில் ஸ்ரீ நம்பெருமாளுக்கான ஊஞ்சல் திருவிழா யேற்பாட்டாக நவம்பர் 8 முதல் 15 வரை (ஐப்பசி 22 முதல் 29 வரை) நடைபெறவுள்ளது.
முதல் நாளான 08.11.2025 (சனிக்கிழமை) அன்று, ஸ்ரீநம்பெருமாள் உபயகரர் திருவீதி புறப்பாடு, ஊஞ்சல் மண்டபம் சேருதல், அரங்கநாயகி கண்டூரி ஊஞ்சல் ஆராதனம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறும்.
இவ்விழாவில் காலையிலும் மாலையிலும் பல்வேறு மூலஸ்தான சேவைகள் நடைபெறவுள்ளன.
அடுத்து, 2ம் திருநாள் – 09.11.2025 (ஞாயிற்றுக்கிழமை), 3ம் திருநாள் – 10.11.2025 (திங்கள்கிழமை), 4ம் திருநாள் – 11.11.2025 (செவ்வாய்க்கிழமை), 5ம் திருநாள் – 12.11.2025 (புதன்கிழமை), 6ம் திருநாள் – 13.11.2025 (வியாழக்கிழமை), 8ம் திருநாள் – 15.11.2025 (சனிக்கிழமை)
நாட்களில் திருவிழா சிறப்பாக நடைபெறவுள்ளது.
ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை நேரங்களில் பூஜை, சேவை நேரங்கள் திட்டமிட்டபடி நடைபெறும். இரவு 8:30 மணிக்குப் பிறகு மூலவர் சேவை நடைபெறாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊஞ்சல் திருவிழா நாட்களில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து ஸ்ரீநம்பெருமாளின் அருளைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments