திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழ் துறையில் கருத்தரங்கு
" ஏன் வேண்டும் இன்பத் தமிழ் கல்வி ? " என்ற தலையங்கத்தில்
பிஷப் ஹீபர் கல்லூரியின்
பொன் விழா அரங்கில் நடைபெற்றது . கல்லூரியின் முதல்வர் முனைவர் .பால் தயாபரன் தலைமையில் இந்த கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ் துறையின் தலைவர். பால் சந்திரமோகன், வரவேற்புரையுடன் கருத்தரங்கம் தொடங்கப்பட்டது .
இந்த கருத்தரங்கின் நோக்கத்தை முனைவர். ராஜ்குமார் வழங்கினார். சிறப்பு உரையாளராக அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் இருந்து இணையவழியில் வாயிலாக எனர்ஜைஸ். மகேந்திரன் பெரியசாமி சிறப்புரையாற்றினார் . தமிழ் மொழியின் இலக்கியம் இலக்கணத்தைப் பற்றி சிறப்பாக எடுத்துரைத்தார்.
இதற்கான பல சிறப்பு எடுத்துக்காட்டுகளை கொண்டு விளக்கினார்.
மேலும் இலங்கையிலிருந்து ஆங்கில மொழி கற்பித்தல் துறை , கலை பீடம் யாழ் பல்கலைக்கழகத்தில், முதுநிலை விரிவுரையாளர் சிவகௌரி ராஜ சாந்தன் , தமிழ் மொழிக்காக ரத்தம் சிந்திய முக்கிய புலவர்களான உ.வே சாமிநாத ஐயர், பாரதியார் போன்றவர்களை போற்றி பல கருத்துக்களை எடுத்துரைத்தார். திரு முனைவர் .பெட்ரிக் ஜெபராஜ் அவர்களின் நன்றியுரையுடன் கருத்தரங்கம் இனிதாய் முடிந்தது .
இந்தக் கருத்தரங்கத்தில் தமிழ் துறையின் மாணவ மாணவியர்கள் மேலும் பல்வேறு துறையை சார்ந்த மாணவ மாணவியர்கள் , கல்லூரியின் பேராசிரியர்கள் மேலும் தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு கருத்தரங்கை சிறப்பித்தனர்.
பிஷப் ஹீபர் கல்லூரியின் வரலாற்றுத்துறை பிரிவு மாணவ செய்தியாளர்களும் கலந்து கொண்டனர்.