Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

தமழ்நாடு முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா “இது நம்ம ஆட்டம் – 2026”

தமிழ்நாடு முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா இது நம்ம ஆட்டம்-2026 விளையாட்டுப் போட்டிகள் 16 வயது முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்களுக்கு ஒன்றியம், மாவட்ட மற்றும் மாநில அளவில் தடகளம், கபாடி, வாலிபால், கேரம், கயிறு இழுத்தல் (Tug of War) ஆண்/பெண் இருபாலருக்கும், ஸ்ட்ரீட் கிரிக்கெட் (Street Cricket) ஆண்களுக்கும், எறிபந்து விளையாட்டுப் போட்டிகள் பெண்களுக்கும் மற்றும் நேரடி மாவட்ட அளவில் ஓவியப்போட்டி மற்றும் கோலப்போட்டி ஆண்/பெண் இருபாலருக்கும், மாற்று திறனாளிகளுக்கு 100 மீ, குண்டு எறிதல் தடகள போட்டிகள் பின்வரும் வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்படவுள்ளது.

போட்டி முன் பதிவு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் https://cmyouthfestival.sdat.in, https://sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வீரர்களின் குழு மற்றும் தனி நபர்களின் அனைத்து விவரங்களை பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்திட கடைசி நாள் 21.01.2026 ஆகும்.
ஒன்றிய அளவிலான போட்டிகள் 22.01.2026 முதல் 25.01.2026 வரை, மாவட்ட அளவிலான போட்டிகள் 30.01.2026 முதல் 01.02.2026 வரை திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலும் மற்றும் மாநில அளவிலான போட்டிகள் 06.02.2026 முதல் 08.02.2026 வரை சென்னை மாவட்டத்தில் நடைபெற உள்ளது.

போட்டிகளில் கலந்து கொள்ள விதிமுறைகள்: விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வயது வரம்பு 16 வயது முதல் 35 வயது வரை ஆகும். 01.01.1991 பிறகு அல்லது 31.12.2009 க்கு உட்பட்ட தேதிகளில் பிறந்திருக்க வேண்டும். இணையதளம் வாயிலாக அல்லது போட்டிகள் நடைபெறும் நாளன்று நேரடி பதிவு மேற்கொள்ளலாம். பங்கேற்பாளர்கள் அவரவர் ஒன்றியத்தில் மட்டுமே ஆதார் அடிப்படையில் பங்கேற்க இயலும்.
ஒரு வீரர் அதிகபட்சமாக 2 தடகளப் போட்டிகளிலும், கூடுதலாக 2 விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்கலாம். ஒன்றியத்தில் முதல் இடத்தில் வெற்றி பெற்றவர் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

மேலும், முக்கிய விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், அண்ணா விளையாட்டரங்கம், திருச்சிராப்பள்ளி தொலைபேசி எண். 0431-2420685 / 7401703494 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *