மதுரையில் நடைபெற உள்ள கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம், திமுக இளைஞர் அணி செயலாளரும் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் திருச்சி விமான நிலையம் வருகை தந்தார்.
அவருக்கு திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு ஆகியோர் தலைமையில் திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்களான சௌந்தரபாண்டியன்,
காடுவெட்டி தியாகராஜன், பழனியாண்டி, மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி மண்டல தலைவர் மதிவாணன் உள்ளிட்ட திமுகவினரும் பங்கேற்று, தமிழக துணை முதலமைச்சருக்கு வரவேற்பு அளித்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments