இரண்டு நாள் பயணமாக திருச்சி வந்துள்ள மத்திய கல்வித்துறை இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார் திருச்சி துவாக்குடி என்ஐடியில் மாணவர் நிகழ்வு ஒன்றில் பங்கேற்றார். பின்னர் பாஜக நிகழ்வுகளில் பங்கேற்ற பிறகு இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்…. இந்தியா முழுவதும் புதிய கல்விக் கொள்கை திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
புதிய கல்வி கொள்கையை தமிழ்நாடு அரசு பள்ளிகளில் சிறப்பாக பின்பற்றுகிறது.பு திய கல்வி கொள்கையை எதிர்க்கிறோம் என தமிழ்நாடு அரசு தெரிவித்தாலும், எழுத்து பூர்வமாக அவர்கள் எதிர்க்கவில்லை. புதிய கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு அறிக்கையை சமர்பித்து வருகிறார்கள்.
ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகளை மத்திய அரசு மிரட்டுவதாக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் K.N.நேரு  குற்றச்சாட்டு கூறியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழக IAS , IPS  அதிகாரிகளை மிரட்டவில்லை. அனைத்து அதிகாரிகளையும் சமமாக நடத்துகிறோம் என்பதே உண்மை என்றார்.
மேலும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.க சிறப்பான வெற்றியை பெறும் அதில் திருச்சி மாவட்டத்தின் பங்களிப்பு சிறப்பாக இருக்கும் என்றார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO



            
            
            
            
            
            
            
            
            
            


Comments