திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலை கடையாக்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுதே தேவசேனா அவர்கள் இன்று 19/06/2025 காலை 11:45 மணி அளவில் நான்கு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது
எதிரே திருச்சியில் இருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மோதியதில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் நான்கு சக்கர வாகனம் நிலைத்தடுமாறி அருகில் பழுது பார்ப்பதற்காக நின்று கொண்டிருந்த ஜேசிபி வாகனம் மீது எதிர்பாராத மோதி விபத்துக்குள்ளானதில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுதே தேவசேனா அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்
முசிறி வருவாய் கோட்டாட்சியர் திருமதி ஆறுமுதே தேவசேனா அவர்கள் உயிரிழப்பு வருமான வருவாய் துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். தேவசேனா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது உறவினர் அவருடன் பணிபுரிவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆரமுதே தேவசேனா அவர்கள் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு அண்மையில்
அறிவித்த அரசு அலுவலர்களுக்கான காப்பீட்டுத் தொகை ரூபாய் ஒரு கோடி பெற்று வழங்கப்படும். மேலும் அவரது குடும்பத்தினருக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து 10 லட்சம் ரூபாய் குடும்ப பாதுகாப்பு நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவு பெற்றுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments