Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

நான்கு ஆண்டுகளாக ஆளுநருடன் தான் போராடுகிறது தமிழ்நாடு – உதயநிதி ஸ்டாலின்

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழஙகினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு சட்டமன்ற உறுப்பினர்கள் தியாகராஜன், பழனியாண்டி, செளந்தரராஜன், ஸ்டாலின் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய
அமைச்சர் கே.என்.நேரு, முதல்வரும் துணை முதல்வரும் காட்டும் வழியில் செயல்பட்டு திமுகவை வெற்றி பெற செய்ய வேண்டும். ஸ்ரீரங்கம் திமுகவிற்கு அருமையான தொகுதி இரண்டு மூன்று முறை ஸ்ரீரங்கத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த பொழுதும் குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி வாய்ப்பை இழந்துள்ளோம். கடந்த சட்டமன்ற தேர்தலில் 20 ஆயிரம் வாக்குகளும் பாராளுமன்றத் தேர்தலில் 45 ஆயிரம் வாக்குகள் அதிகமாக ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் பெற்றுள்ளோம். திமுகவை வெற்றி பெற செய்து மீண்டும் ஸ்டாலினை முதலமைச்சராக்குவதற்கு கடுமையாக பாடுபடுவோம் ஒன்பது தொகுதியிலும் திமுக வெற்றி பெறும் என்றார்.

அடுத்து பேசிய உதயநிதி ஸ்டாலின்,
திமுகவின் திருப்புமுனை என்றால் அது திருச்சி தான் வரைபடத்தில் மட்டும் மத்தியில் இருக்கக்கூடிய மாவட்டம் திருச்சி கிடையாது. தமிழ்நாட்டின் அரசியலிலும் மத்தியில் இருக்கும் மாவட்டம் திருச்சி.
75 ஆண்டுகாலமாக பல்வேறு அவதூறுகளையும் பொய்ப் பிரச்சாரங்களையும் திமுக மீது கட்டவிழ்த்து விட்டாலும் திமுகவை தொட்டு கூட பார்க்க முடியவில்லை அதற்குக் காரணம் திமுகவில் தொண்டர்கள் தான்.
75 ஆண்டுகள் ஆனாலும் அதே இளமையோடும் அதே வலிமையோடையும் திமுக இருப்பதற்கு காரணமும் நீங்கள் தான்.
திமுக என்கிற கோட்டைக்கு அடித்தளமும் நீங்கள் தான்
நின்ற தேர்தலில் அனைத்தையும் வென்று காட்டியவர் கலைஞர்.அதே போல முதல்வர் திமுக வின் தலைவராக பொறுப்பேற்ற பின் நடந்த அனைத்து தேர்தல்களிலும் வென்றுள்ளார்.
திராவிட மாடல் அரசு அமைந்த பின் இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் ஏராளமான திட்டங்களை முதல்வர் கொடுத்துள்ளார்.
தேர்தல் அறிக்கையில் அறிவிக்காத பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியவர் நம் முதல்வர்.
மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவது தான் திராவிட மாடல் அரசு.
இன்னும் 2 மாதங்களில் விடுப்பட்ட மகளிருக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படும்.
இந்தியாவின் முதல் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.
அதனால் தான் ஒன்றிய பாசிச பா.ஜ.க அரசு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அடிமைகளுடன் சேர்ந்து என்னென்னமோ  திட்டம் தீட்டுகிறார்கள். எவ்வளவோ முட்டு கொடுக்கிறார்கள். அந்த தடையெல்லாம் உடைத்து சிறந்த ஆட்சியை முதல்வர் வழங்குகிறார்.
நிதி உரிமை, கல்வி உரிமை, மொழி உரிமை என மாநிலங்களின் உரிமைகளை பறிக்க பாசிச பா.ஜ.க அரசு முயற்சிக்கிறது.
தொகுதி மறுவரை என்கிற பெயரில் மக்களவை தொகுதிகளை குறைக்க பார்க்கிறார்கள். இதையெல்லாம் எதிர்த்து குரல் கொடுக்கும் தலைவராக நம் முதல்வர் இருந்து வருகிறார்.
புதிய கல்வி கொள்கை மூலம் இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்க பார்க்கிறார்கள், குல கல்வி திட்டத்தை அமல்படுத்த பார்க்கிறார்கள். ஆனால் அதை அனுமதிக்க மாட்டோம் என முதல்வர் உறுதியாக இருக்கிறார்.
திமுகவில் பல்வேறு சார்பு அணிகள் உள்ளது. ஆனால் அதிமுகவில் நம்மை விட பல அணிகள் உள்ளது எடப்பாடி அணி ஓபிஎஸ் அணி என பல அணிகள் உள்ளது.
பாஜக உடன் கூட்டணி இல்லை என கூறிய எடப்பாடி பழனிச்சாமி தற்பொழுது பாஜகவுக்கு நன்றி கடனாக இருக்கிறோம்  என பேசி உள்ளார்.
காரை மாற்றுவதும் காலை மாற்றுவதும் எடப்பாடி பழனிச்சாமிக்கு புதிது கிடையாது.
ஜெயலலிதா இருந்தவரை அவர் காலில் விழுந்திருந்தார் அதன் பின் சசிகலா கால் டிடிவி தினகரன் கால் என பல கால்கள் மாறியது தற்பொழுது நிரந்தரமாக மோடி காலில் விழுந்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமியை தமிழ்நாட்டு மக்கள் செல்லமாக முகமூடி பழனிச்சாமி என தான் கூறுகிறார்கள்.

டெல்லிக்கு போகும் போது சிரித்து கொண்டே சென்றவர் அமித் ஷாவை சந்தித்து விட்டு வரும் போது முகத்தை மூடிவிட்டு வருகிறார் அதற்கு ஏன் எனக் கேட்டால் முகம் வேர்த்து விட்டதாக கூறுகிறார் அவருக்கு முகம் வேர்க்கவில்லை கண் தான் வேர்த்துள்ளது

தமிழ்நாட்டை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என பழைய அடிமை அதிமுகவின் துணையோடு பாஜக வந்துள்ளது தற்பொழுது புது அடிமைகளையும் அவர்கள் தேடிக் கொண்டுள்ளார்கள். நான் யாரை கூறுகிறேன் என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும்.

அவர்களுக்கு அடிமைகள் சிக்குவார்கள் எத்தனை அடிமைகள் வந்தாலும் திமுகவினர் இருக்கும் வரை தமிழ்நாட்டை தொட்டுக் கூட பார்க்க முடியாது.

பாஜகவின் எத்தனை சதிகள் வந்தாலும் அதை முறியடிக்க போவது திமுகவின் தொண்டர்கள்தான்.

நாம் மக்களை தைரியமாக சந்திக்கிறோம் அதற்கு காரணம் நான் கரை ஆண்டுகள் பல்வேறு திட்டங்களை மக்களுக்காக செய்துள்ளோம். திமுக அரசின் திட்டங்களால் தமிழ்நாட்டில் உள்ள குடும்பங்களில் ஒருவராவது அதன் மூலம் பயன்பெற்று இருப்பார்கள்.

நாம் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளோம் பல கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது கடந்து இரண்டு நாட்களுக்கு முன்பு ஆளுநர் ஆர்.என்.ரவியும் தன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.
தமிழ்நாடு யாருடன் போராட போகிறது என அவர் கேட்கிறார் நான்கு ஆண்டுகளாக தமிழ்நாடு ஆளுநருடன்  தான் போராடிக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து  போராடும் வென்றும் காட்டும்.

எடப்பாடி பழனிச்சாமி போல் எல்லோரும் அடிமைகளாக இருப்பார்கள் என ஆளுநர் ஆர் என் ரவை நினைத்துக் கொண்டிருக்கிறார்.

திமுக இருக்கும் வரை அநீதிக்கு எதிராக தொடர்ந்து போராடிக் கொண்டுதான் இருக்கும்.

கடைசி திமுக தொண்டன் இருக்கும் வரை தமிழ்நாடு பாசிசத்திற்கு எதிராக போராடிக் கொண்டுதான் இருக்கும் பாசிசத்திற்கு தமிழ்நாட்டில் இடம் அளிக்காது.

தமிழ்நாட்டு மக்கள் மனதில் அதிமுக முதல் இடத்தில் இருப்பதாகவும் இரண்டாம் இடத்திற்கு தான் போட்டி நடைபெறுவதாகவும் எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். ஆனால் உண்மையில் அதிமுகவிற்குள் தான் யார் இரண்டாம் இடம் என அவர்களுக்குள் போட்டி நடக்கிறது அதில் முதல் இடத்தில் மோடியும் அமித்சாவும் தான் இருக்கிறார்கள்.

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என கூறும் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவிடமிருந்து அதிமுகவை மீட்க வேண்டும்.

திமுகவின் வரலாற்றை இன்றைய இளைஞர்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.

பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை அனைவரும் சமம் என மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு கூட்டத்தில் பேசிய போது பலர் எனக்கு எதிராக கருத்து கூறினார்கள் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார்கள். இன்று அதே கருத்தை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறிய பொழுது அவர் மீது காலணியை வீசி உள்ளார்கள் இதுதான் இன்றைய பாசிச பாஜக ஆட்சியின் நிலையாக இருக்கிறது.

தமிழ்நாட்டை மட்டுமல்ல இந்தியாவையே காக்கும் பொறுப்பு திமுகவிற்கு உள்ளது.

பூத் கமிட்டியினர் தான் திமுகவின் ஸ்டெதஸ்கோப் போன்றவர்கள். நீங்கள் உங்கள் பகுதியில் உள்ள அனைத்து மக்களுடனும் தொடர்பில் இருக்க வேண்டும்.

திமுக அரசு ஆட்சி அமைந்த பின் கல்வி உயர்விற்காக பல்வேறு திட்டங்களை செய்து வருகிறோம் மாணவர்களுக்கு மடிக்கணினி விரைவில் வழங்கப்படும்.
தமிழ்நாட்டின் எந்த உரிமையும் இழக்க கூடாது என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார் ஒன்றிய அரசு செயல்படுத்தும் திட்டங்களில் தமிழ்நாடு என்ன முடிவு இருக்கிறது என அனைத்து மாநிலங்களும் உற்று நோக்க கூடிய இடத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளார்.

அடுத்து 5 மாதங்கள் ஒவ்வொரு நிமிடமும் முக்கியம். நாம் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு 200 க்கும் அதிகமான தொகுதிகளில் திமுக வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *