திருச்சி ஜனவரி 8, தை திருநாளாம் பொங்கல் திருநாள் ஜனவரி 15ஆம் தேதி வருவதையொட்டி தமிழக முதல்வர் அவர்கள் தாய்மார்கள் பயன்பெறும் வண்ணம் தமிழக அரசின் சார்பில் ரூபாய் 3000 ரொக்கம் மற்றும் சேலை, வேஷ்டி, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒருமுழு நீள கரும்பு அடங்கிய தொகுப்பினை தமிழக முழுவதும் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வண்ணம் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் அந்தந்த நியாய விலை கடைகள் மூலம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்
மேலும் இதனையடுத்து இன்று சென்னையில் தமிழக முதல்வர் அவர்கள் இத்திட்டத்தினை துவக்கி வைத்தார்
முதல்வர் துவக்கி வைத்ததின் தொடர்ச்சியாக திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முதலியார்சத்திரம், காஜா பேட்டை, ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் ரூபாய் 3000 ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு அடங்கிய பை மற்றும் ஒரு முழு நீள கரும்பினை பொதுமக்களுக்கு வழங்கினார்
மேலும் இந்நிகழ்வில் மண்டல குழு தலைவர் மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் பகுதி கழகச் செயலாளர் விஜயகுமார் ராஜ்முஹம்மத் மாமன்ற உறுப்பினர் லீலாவேலு மாவட்ட வருவாய் அலுவலர் மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் சாலை தவவளவன் தாசில்தார்கள் விக்னேஷ், தனலட்சும தாசில்தார் விக்னேஷ்
மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments