தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திருச்சி மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 20.09.2025 இன்று புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் மாவட்டத் தலைவர் ஜான்சன் பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் மு.மணிகண்டன் அனைவரையும் வரவேற்று கூட்டத்தை ஒருங்கிணைத்தார்.
மூன்று மாத எதிர்காலத் திட்டங்களாக, கிளை மாநாடுகள், மாவட்ட மாநாடு, துளிர் அறிவியல் திருவிழா, வினாடி வினா, குழந்தைகள் அறிவியல் மாநாடு போன்றவை முன்வைத்து பேசப்பட்டது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாநிலச் செயலாளர் எம்.எஸ்.ஸ்டீபன் நாதன் கலந்து கொண்டு மாவட்டப் பணிகளை பாராட்டி நிறைவுரை வழங்கினார்.
மாவட்டப் பொருளாளர் ச.மாரிமுத்து நன்றி கூறினார். மாநிலச் செயலாளர் மு.மாணிக்கத்தாய் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments