Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

சாரநாதன் பொறியியல் கல்லூரியில் டெலிகாம் நுகர்வோர் அவுட்ரீச் நிகழ்ச்சி

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் TRAI தொலைத்தொடர்பு நுகர்வோர் மத்தியில் அவர்களின் உரிமைகள் மற்றும் சலுகைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் (25.07.24) அன்று சாரநாதன் பொறியியல் கல்லூரியில் டெலிகாம் நுகர்வோர் அவுட்ரீச் நிகழ்ச்சியை நடத்தியது.

இணை ஆலோசகர் கே.வி.சுரேஷ் பாபு டி.எஸ்., அனைவரையும் வரவேற்று 5G தொழில்நுட்பம் திட்டத்தின் நோக்கம் டெலிகாமின் துறையின் ஒழுங்கான வளர்ச்சியிலும் அதே சமயம் நுகர்வோரின் நலன்களை பாதுகாப்பதிலும் TRAI யின் வளர்ச்சி மற்றும் பங்கு குறித்து விளக்கினார். திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் டி.வளவன் TRAI பிராந்திய அலுவலகம் நிகழ்ச்சியை நடத்துவதற்கு தங்கள் கல்லூரியை தேர்ந்தெடுத்ததற்காக நன்றி கூறினார். அதே நேரம் மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் இலக்குகளை அடைவதில் தங்கள் அறிவைப் புதுப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மண்டல அலுவலக ஆலோசகர் பிரவீன்குமார் தொலைத்தொடர் பு நுகர்வோர் பாதுகாப்பு பிராந்திய அலுவலகத்தின் பாத்திரங்கள் மற்றும் செயல்பாடுகள் எடுக்கப்பட்ட முயற்சிகள் பற்றி சிறப்புரையாற்றினார். முழு சுற்றுச்சூழல் அமைப்பு செழிக்க அனுமதிக்கும் வகையில் சரியான கொள்கை/ ஒழுங்குமுறை சட்ட வேலைகள் புதுமைகளை ஊக்குவிக்கவும் மற்றும் பொருளாதாரத்தில் முதலீட்டை ஊக்குவிப்பதை நோக்கி TRAI செயல்படுகிறது என்று குறிப்பிட்டார்.

தொலைத்தொடர்பு இயக்கம் பல்வேறு துறைகளில் 5ஜி தொழில்நுட்ப பயன்பாடு குறித்து அடையாளம் காணவும் மேம்படுத்தவும் மற்றும் பெருக்கவும் TRAI எடுத்த முயற்சிகள் பற்றி அவர் குறிப்பிட்டார் கே.வி. சுரேஷ் பாபு ஐ.டி.எஸ்., இணை ஆலோசகர் புகார் மற்றும் அதன் தீர்வு வழிமுறை, மொபைல் எண்  பெயர்வுத்திறன் பற்றிய விவரம், மற்றும் கோரப்படாத தகவல் தொடர்பு, மதிப்பு கூட்டல் தொடர்பாக TRAI எடுத்த நடவடிக்கைகள் சேவைகள் போன்றவை மற்றும் EMF கதிர்வீச்சு, டிஜிட்டல் மோசடிகள், 5G தொழில்நுட்ப பயன்பாடு போன்றவை பற்றி விரிவாக விளக்கினார். ஸ்ரீ நரேந்திரன் எஸ். எல், மேலாளர், சந்தை நுண்ணறிவு பிரிவு, ரிசர்வ் வங்கி, சென்னை அவர்கள் “டிஜிட்டல்/ சைபர் மோசடிகள்- விழிப்புணர்வு மற்றும் ரிசர்வ் வங்கி எடுத்த முயற்சிகள்” குறித்து விளக்கினார்.

ஸ்ரீ பண்டிட் சுபக்த் அலன் அனுராக், AD (பாதுகாப்பு), TN LSA, அவர்கள் டிஜிட்டல் மோசடிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், EMF கதிர்வீச்சு மற்றும் DOT யின் முயற்சிகள் பற்றிய விளக்கக் காட்சி வழங்கினார். ஸ்ரீ எம் வெங்கடபதி, சீனியர் ஆராய்ச்சி அதிகாரி சாரநாதன் பொறியியல் கல்லூரி மாணவர்கள்/ ஆசிரியர்கள், பேச்சாளர்கள், CAG உறுப்பினர்கள் தமிழ்நாடு வட்டம், அனைத்து தொலை தொடர்பு சேவை வழங்குனர்களின் பிரதிநிதிகள், நுகர்வோர் சிஓபியில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி கூறினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *