திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி உட்கோட்ட முசிறி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிட்டிலரை கிராமத்தில் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.கடந்த 15 வருடங்களுக்கு முன்னால் கடக்கால் மாரியம்மன் சப்பரத்தில் வைத்து மாரியம்மன்
கோவில் தெரு வழியாக கொண்டு வருவதற்கு ஒரு சில சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து.வந்தனர் தற்போது இரு தரப்பினருக்கும் சுமுகம் ஏற்பட்டதாக தெரிவித்து கடக்கால் மாரியம்மன் சப்பரத்தில் வைத்து மாரியம்மன் கோவில் தெரு வழியாக எடுத்து வருவதற்கு சம்மதம் தெரிவித்த
நிலையில் (27/04/2025 )முதல் (29/04 /2025) வரை திருவிழா நடத்துவதற்கு அனுமதி கோரி காவல்துறையினரிடம் மனு கொடுத்து இருந்த நிலையில் அனைத்து தரப்பினரையும் காவல் நிலையம் அழைத்து விசாரணை நடத்தப்பட்டது. அப்பொழுதும் இரு தரப்பினருக்கிடையே எவ்வித சுமூக முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில்
பிரச்சனையில் தீர்வு காணும் பொருட்டு இருதரப்பினரையும் அழைத்து அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் (03. 05.2025) காலை 11:00 மணி அளவில் நடத்தப்பட்டது. இதில் பிரச்சனை எதுவும் ஏற்படின் காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் மகாமாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்று உள்ளது. கோவில் காப்பு கட்டும் நிகழ்ச்சியின் போது மின்சாரம் தாக்கி புஷ்பா என்பவர் உயிரிழந்தார்.மேலும் ஏழு பேர் முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் கோயில் செயல் அலுவலர் இதற்கான எந்த அனுமதியும் கொடுக்கப்படவில்லை என்று தகவல் தெரிவிக்கின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments