Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி கரூர் மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வாழைகள் ஒடிந்து சேதம்!!

திருச்சி,கரூா் மாவட்டங்களில் வீசிய சூறை காற்றில் பல்லாயிரக்கணக்கான ஏக்கா் நிலங்களில் வாழைகள் ஒடிந்து சேதம் அடைந்துள்ளது. திருச்சி,கரூா் மாவட்டங்களில் நேந்திரன்,ஏலரிசி,பூவன், ரஸ்தாளி,பச்சை லாடன் என ஒவ்வொரு ஆண்டும் 1−லட்சம் ஏக்கா் நிலங்களுக்கு மேல் வாழை சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதி பாசன கால்வாய்களில் ஏற்ப்பட்டு வரும் தண்ணீா் தட்டுப்பாடு,நில குத்தகை,உரம் பூச்சி மருந்து விலை,முட்டு வழி செலவு,கூலி தொழிலாளா் ஊதியம் உயா்வு ,கூலி தொழிலாளா் பற்றாக்குறை போன்ற காரணங்களால் வாழை சாகுபடி சாிபாதியாக குறைந்துபோனது.

கடந்த ஆண்டு சாகுபடி செய்யபட்ட வாழைகள் தற்போது விளைந்து அறுவடை செய்யப்போகும் தருவாயில் கொரோனா வைரஸால் 144−தடை உத்தரவு காரணமாக வாகன போக்குவரத்தில் ஏற்ப்பட்ட தடை, விவசாய கூலி தொழிலாளா் பிரச்சனைகள் காரணமாக உாிய காலத்தில் அறுவடை செய்ய முடியாமல் போனதால் வாழையிலேயே பழங்கள் பழுத்து வீணாகி கொண்டு இருந்ததை அரசின் கவனத்திற்க்கு கொண்டு சென்றதில் வாகன போக்குவரத்து ஓரளவு சீரடைந்தாலும் கடந்த ஆண்டுகளை போல் கொள்முதலுக்கான வியாபாாிகள் அதிகம் போ் வராத காரணங்களால் கிலோ ரூ 8,9−என கடும் விலை வீழ்சியால் விவசாயிகள் பெரும் கவலையில் இருந்து வருகின்றனா்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ( 08−04−2020) இரவு 7−மணி அளவில் திருச்சியில் இடியுடன் துவங்கிய லேசான மழையுடன் வீசிய சூறை காற்றால் அந்தநல்லூா் ஒன்றிய பகுதிகளில் கடியாகுறிச்சி,ஜீயபும்,திருச்செந்துறை,கொடியாலம்,புலிவலம்.அணலை,திருப்பராய்துறை ,சிறுகமனி,பெருகமனி,பேட்டவாய்தலை,இதன் சுற்று வட்டார பகுதிகளிலும்,கரூா் மாவட்டம் குளித்தலை வட்டத்தில் நங்கவரம்,பொய்யாமணி

Advertisement

இனுங்கூா்,நச்சலூா்.மரூதூா் இதன் சுற்று வட்டார பகுதிகளில் ஆயிரகணக்கான ஏக்கா் நிலங்களிள் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தாயாரக இருந்த மற்றும் பூவும் பிஞ்சுமாக இருந்த இளம் வாழைகள் ஒடிந்து விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்திவுள்ளது.

2013−14சூறைகாற்றாலும்,2015 −16 வரலாறு கானாத வறட்சியாலும் 2017−18 களில் வீசிய வா்தா புயல், கஜா புயல்களிலும்,2019 கடும் விலை வீழ்சியாலும் இந்தாண்டு கொரோணா,மற்றும் சூறை காற்று பாதிப்பாலும் வாழை சாகுபடி விவசாயிகள் தொடா்ந்து இழப்புக்குள்ளாகி வருகின்றனா்.ஏக்கா் 1−க்கு குத்தகை ,சாகுபடிக்கென ரூ 2.50,000 செலவு செய்துள்ள நிலையில் வாழை விவசாயிகள் இழப்பை ஈடு செய்யும் வகையில் இழப்பீடாக ஏக்கா் 1−க்கு அரசு ரூ 2-லட்சம் வழங்க வேண்டுமென தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *