தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட 6244 காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு குருப்-IV தேர்வுக்கான அறிவிப்பாணை (30.01.2024) அன்று வெளியிடப்பட்டது. இத்தேர்வானது (09.06.2024) அன்று நடைபெற உள்ளது.

இத்தேர்விற்கு (12.02.2024) முதல் இலவச பயிற்சி வகுப்புகள் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வினை போட்டித்தேர்வர்கள் மேலும் சிறப்பாக எதிர்கொள்ளும் வகையில் மாதிரி தேர்வுகள் (TEST BATCH) இன்று (15.03.2024) வெள்ளிக்கிழமை பிற்பகல் 02:00 முதல் நடைபெறவுள்ளன.

மேற்கண்ட மாதிரி தேர்வுகள் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் நடத்தப்பட உள்ளது. ஆகவே, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து போட்டித்தேர்வர்களும் இம்மாதிரி தேர்வுகளில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், இதுதொடர்பான விவரங்களுக்கு 0431-2413510, 9499055901, 9499055902 என்ற திருச்சிராப்பள்ளி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா,பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments