Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

தவெக தலைவர் விஜய் ஊடகத்தில் விளம்பரத்திற்க்காக திமுக அரசை குறை கூறுகிறார் – அமைச்சர் நேரு பேட்டி

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே கலைஞர் திருமண மண்டபத்தில் மகளிருக்காக நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர் .பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு…..

தமிழ்நாட்டில் நடப்பது பெண்களுக்கான ஆட்சி மகளிர் தினத்தில் இதை நான் குறிப்பிடுகிறேன்.இந்த நான்கு ஆண்டுகளில் பெரும்பாலான திட்டங்கள் மகளிர் காண திட்டங்கள்.வேண்மென்றே எதாதவது குறை சொன்னால் தான் ஊடகத்துறையில் விளம்பரங்கள் வரும் காரணத்தால் விஜய் பேசுகிறார்.பத்திரிக்கையாளர்கள் நீங்கள் குறிப்பிடுங்கள் எவ்வளவு திட்டங்கள் முதல்வர் கொடுத்துள்ளார். விடுபட்டுள்ளவர்களுக்கு போய் சேரவேண்டிய திட்டங்களை முதல்வர் முயற்சி எடுத்து வருகிறார். எங்கள் ஆட்சியை குறை சொல்வதற்காக விஜய் கூறுகிறார் தவிர உள்ளபடியே முதல்வர் சாலையில் செல்லும் பொழுது பெரும்பகுதி பெண்கள் தான் வரவேற்கிறார்கள். ஆகவே பெண்களுக்கான ஆட்சி இது. பெண்களுடைய ளுடைய ஆட்சி

பெண்களுக்காகவே ஏராளமான திட்டங்களை தொடங்கி இருக்கிற ஆட்சி இது.திருச்சியில் வாக்காளர் பட்டியலில் ஒரு வாக்காளரின் தந்தை பெயர் ஹிந்தியில் வெளியானதிற்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பித்துள்ளார்கள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் உடனடியாக அதனை நீக்கி தமிழில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா பிரதீப் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.அண்ணாமலை தமிழ்நாட்டில் அஞ்சு லட்சம் கோடி கடன் வைத்துள்ளார்கள் என்று கூறியதற்கு 81 லட்சம் கோடி மத்திய அரசு கடன் வைத்துள்ளது. நிதித்துறை அமைச்சர் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார். அவ்வளவு கடனை வைத்துள்ளார்கள் அதை பற்றி அவர்கள் சொல்லவில்லையே என்றார்.அனைத்துக்கட்சிக் கூட்டம் கூட்டுவதை பாரதிய ஜனதா கட்சி விரும்பவில்லை. அனைத்து முதல்வர்களையும் அழைத்து கோரிக்கைகளை வைக்க வேண்டுமென முதல்வர் முயற்சி மேற்கொண்டு வருகிறார். 

இந்த ஆட்சி வந்ததிலிருந்து திமுக காரர்கள் மீது திமுக ஆதரவாளர்கள் மீதும் ரெய்டு நடந்து கொண்டே இருக்கிறது.அந்த வகையில் தான் இந்த ரெய்டு.இரண்டு நாட்களுக்கு முன்னால் சந்திரபாபு நாயுடு ஒரு அறிக்கை விடுகிறார். அறிக்கையில் இருக்கும் தெலுங்கு மக்கள் எல்லாம் தமிழ் மக்களை போல் இரு மொழிக் கொள்கை ஆங்கிலத்தை கற்றுக் கொள்ளுங்கள். உலகில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும்தமிழர்கள் தான் தலைவராக இருக்கிறார்கள். பாரதிய ஜனதா கூட கூட்டணி இருக்கும் முதல்வரே இதை குறிப்பிட்டுள்ளார் இதையே பதிலாக வைத்துக் கொள்ளுங்கள்.திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த  பேருந்து நிலையம்தமிழ்நாட்டிலேயே 40 ஏக்கரில் பெரிய பேருந்து நிலையம் நடைபெற்று வருகிறது. ஒப்பந்தக்காரர்கள் வேலை ஆட்களை தருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது மாவட்ட ஆட்சியர் கூட்டம் போடப்பட்டு நகராட்சி செயலரும் நேரில் பார்வையிட்டு பணிகளை விரைவாக நடக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

விரைவில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு மார்ச் இறுதியில் ஒருங்கிணைந்த திறக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.

 திருச்சி விஷன் செய்திகளை whatsapp மூலம் அறிய 

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

திருச்சி விஷன் செய்திகளை டெலிகிராம் ஆப் மூலம் அறிய

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *