Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தைப்பூசத் திருவிழா – அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு கூட்டம்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், தைப்பூச திருவிழா (02.02.2025) முதல் (12.02.2025) வரை நடைபெறவுள்ளதால் இந்நாட்களில் பக்தர்கள் எவ்வித சிரமமுன்றி சுவாமி தரிசனம் மேற்கொள்ளும் வகையில் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் தைப்பூச திருவிழா வருகின்ற 2025 பிப்ரவரி 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் பிரசித்தி பெற்ற முதன்மை திருக்கோயிலான சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் தைப்பூச திருவிழா ஒன்றாகும். இந்த திருவிழா வருகின்ற பிப்ரவரி மாதம் 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி,

அம்மனுக்கு நாளும் காலையில் திருவீதி உலா நடைபெற்று தினமும் இரவு 08:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று அம்மன் சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை, சேஷம், வெள்ளி குதிரை ஆகிய வாகனங்களில் புறப்பாடு நடைபெறும். தைப்பூச திருவிழா 9ம் திருநாள் பிப்ரவரி 10ம் தேதி அம்மன் இரவு 8:00 மணிக்கு தெப்ப உற்சவம் நடைபெறும்.

தைப்பூச திருவிழா 10ம் திருநாள் பிப்ரவரி 11ம் தேதி செவ்வாய்கிழமை அன்று காலை 7:00 மணிக்கு மேல் 8:00 மணிக்குள் அம்மன் திருக்கோயிலில் இருந்து கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு நால்ரோடு, பள்ளிவிடை பாலம், பனமங்களம், பழூர், கூத்தூர், மாருதி நகர், நம்பர். 1 டோல்கேட், உத்தமர் திருக்கோயில், நொச்சியம் வழியாக வடத்திருகாவேரியான கொள்ளிடத்திற்கு மாலை 5:00 மணிக்குள் சென்றடைந்து தீர்த்தவாரி நடைபெறும்.

அதன் பிறகு, வடத்திருகாவேரியில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் மாலை 06:00 மணி முதல் அம்மன் எழுந்தருளியுள்ள அருள்பாலிப்பார். மேடைக்கு எதிரே பக்தி பாடல்கள் (இன்னிசை கச்சேரி) நடைபெறும். அன்று இரவு 11:00 மணியளவில் சமயபுரம் அருள்மிகு மாரியம்மனுக்கு ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதரிடமிருந்து சீர்பெறும் வைபவ வெகு விமரிசையாக நிகழ்ச்சி நடைபெறும்.

அதிகாலை 02:00 மணியளவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று காலை 06:00 மணிக்கு மேல் வடதிருக்காவேரியிலிலிருந்து அம்பாள் புறப்பட்டு நொச்சியம், அத்தானி, மண்ணச்சநல்லூர், பல்வேறு பகுதிகளில் சென்று நங்கமங்களசத்திரம், வெங்கங்குடி வழியாக வழிநடை உபயம் கண்டருளி இரவு சுமார் 11:00 மணியளவில் திருக்கோயில் ஆஸ்தான மண்டபம் வந்தடையும்.

இவ்விழா சிறப்பாக நடைபெறும் வகையில் இன்று (23.01.2025) திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் தலைமையில் திருச்சி மண்டல இணை ஆணையர் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் முன்னிலையில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி கூடுதலாக காவல்துறை காவலர்கள் பணியமர்த்தவும், அம்மன் திருக்கோயிலில் இருந்து புறப்பட்டு திரும்பி வரும் வரை பாதுகாப்பு பணிக்கு காவலர்கள் உடனிருக்கவும்.

அம்மன் வழிநடை உபயம் கண்டருளும் வழித்தடங்களில் போக்குவரத்து இடையூறு ஏற்படா வண்ணம் போக்குவரத்து காவல்துறை காவலர்கள் பணியமர்த்தவும், தைப்பூச திருவிழா நாளில் கொள்ளிட ஆற்றில் தண்ணீரை தேக்கவும், புள்ளம்பாடி மற்றும் பெருவளவாய்க்காலில் தண்ணீர் திறக்கவும், அம்மன் திருவீதி உலா வழித்தடங்களில் உள்ள மின் இணைப்புகளை முறைப்படுத்திட மின்வாரிய பணியாளர்கள் உடன் வரவும், பக்தர்கள் பாதுகாப்பிற்கு 108 முதலுதவி சிகிச்சை வாகனம் தயார் நிலையில் வைக்கவும்,

தெப்ப உற்சவம் மற்றும் கொள்ளிட ஆற்றில் நடைபெறும் தீர்த்தவாரி மற்றும் சீர்பெறுதல் வைபவத்திற்கு தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் வைக்கவும், தெப்பத்தின் உறுதி தன்மையை சரிபார்க்க பொதுப்பணித்துறை அலுவலர்கள் ஆய்வு செய்யவும், பக்தர்களுக்கு பொதுமக்களால் வழங்கப்பட உள்ள அன்னதானத்தை கண்காணிக்க உணவு பாதுகாப்பு துறைக்கும், பக்தர்களுக்கு அடிப்படை வசதியான குடிநீர் தொட்டி மற்றும் மொபைல் கழிவறைகள் நிறுவ மாநகராட்சிக்கும், நால்ரோடு முதல் திருக்கோயில் வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறைக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அதியமான் கவியரசு, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கல்யாணி உள்ளிட்ட இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *