கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டும், நோய் பரவலை தடுக்கும் விதமாகவும், தந்தை பெரியார் அரசு கலை மற்றும் கல்லூரியில், நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக மாபெரும் தடுப்பூசி முகமை (08.01.22) சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் கல்லூரி முதல்வர் முனைவர் ஜெ. சுகந்தி தொடங்கி வைத்தார்.
இம்முகாமில் சிறப்பு விருந்தினராக காவல் துறை துணை கண்காணிப்பாளர் K.K. பாலச்சந்தர் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார். முகாமில் நாட்டுநலப் பணித் திட்ட அலுவலர்கள் முனைவர் வீ.கல்பனலதேவி. முனைவர் சு.பாலமுருகன்,
முனைவர் அ.நோபல் ஜெபக்குமார், மற்றும் முனைவர் பா.பாலமுருகன் ஆகியோர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். இதில் பெருந்திரளான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn







Comments