Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திமுகவுக்கு மகத்தான வெற்றியை அளித்த அனைவருக்கும் நன்றி அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ அறிக்கை

திருச்சி தெற்கு மாவட்டத்தில் திமுகவுக்கு மகத்தான வெற்றியை அளித்த திமுக கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்எல்ஏ நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்… 

தமிழகத்தின் வீதியெல்லாம் தடம் படித்த அனைத்து தரப்பு மக்களையும் நேரில் சந்தித்து குறைகளை, கோரிக்கையையும் கேட்டு அவற்றை தீர்த்து வைக்கும் ஆற்றல் நிறைந்தவராக  திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உயர்ந்து நிற்கின்றார்.

கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சர பயணத்தின் மூலமாக தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்று பயணம் செய்து  திராவிட முன்னேற்ற கழகம் பெருபான்மையாக வெற்றி பெற உறுதுணையாக  இருந்த அவருக்கு இந்த  தருணத்தில் எனது நன்றியை உரித்தாக்குகின்றேன் .

2021 சட்டமன்ற தேர்தலில் திருச்சி தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட திருவெறும்பூர் தொகுதியில் 54 சதவீத வாக்குகளும், திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 54 சதவீத வாக்குகளும், மணப்பாறை சட்டமன்ற தொகுதி 44 சதவீத வாக்குகளை அளித்து மாபெரும் வெற்றியை அளித்த வாக்காள பெருமக்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/GJDm40VrfQc6PgMBZJzYBf

நமது மாவட்டத்தில் பெற்றுள்ள அமோக வெற்றிக்கு  காரணமான திமுக நிர்வாகிகள், கூட்டணி இயக்க நிர்வாகிகள், தோழர்கள், வணிகர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரிய பெருமக்கள், தாய்மார்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பிலும், எனது சார்பிலும் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார் .

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *