Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் தவெக தலைவர் விஜய் பேச்சு

அந்த காலத்துல, போருக்கு போறத்துக்கு முன்னாடி, போர்ல ஜெயிக்குறதுக்காக குலதெய்வ கோயிலுக்கு போய் சாமியை கும்பிட்டுதான் போவாங்கலாம். அந்த மாதிரி தேர்தலுக்கு போறதுக்கு முன்னாடி நம்ம மக்களை பார்த்துட்டு போலாம்னு வந்திருக்கேன்.

ஒரு சில மண்ணை தொட்டா ரொம்ப நல்லது. ஒரு சில நல்ல காரியங்களை இந்த இடத்துல இருந்து தொடங்குனா நல்லதுனு பெரியவங்க சொல்லுவாங்க இல்லையா? அது மாதிரி திருச்சில தொடங்குனா திருப்பு முனையா அமையும். அதுக்கு உதாரணமா அண்ணா அவர்கள் 1956ல தேர்தல்ல நிக்கனும்னு நினைச்சது திருச்சிலதான். எம்ஜிஆர் 1974ல முதல் மாநாடு நடத்துனது திருச்சிதான்.

அது மாதிரி திருச்சிக்கு நிறைய வரலாறு இருக்கு. பெரியார் வாழ்ந்த இடம். மலைக்கோட்டை இருக்கும் இடம். மதசார்பின்மைக்கும், மத நல்லிணக்கத்துக்கும் பெயர் போன இடம். கொள்கை உள்ள மண் இது. அது மட்டுமில்லாம, உங்களை பார்க்கும்போது மனசுக்குள்ள ஒரு பரவசம், ஒரு எமோஷன்.

2021 சட்டமன்றத் தேர்தல்ல திமுக 505 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்துச்சி. அதுல எத்தனை விஷயங்களை நிறைவேற்றியிருக்காங்க? டீசல் விலை ரூ.3 குறைப்பு, மாதாந்திர மின்சாரக் கட்டணம் கணக்கீடு, மாணவர்களின் கல்விக்கடன் ரத்து, அரசு வேலையில் பெண்களுக்கு 40% இடஒதுக்கீடு, பழைய ஓய்வூதிய திட்டம், 2 லட்சம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்புவது. இவை எல்லாம் என்ன ஆனது?

நம்ம கேள்வி கேட்டுக்கிட்டே இருக்க வேண்டியதுதான். திமுகவினரிடமிருந்து எந்தப் பதிலும் வரப்போவதில்லை. திருச்சி மக்களுடைய சத்தம் கேட்கிறதா முதல்வர் அவர்களே?

திமுக-வைச் சேர்ந்தவருக்கு சொந்தமான மருத்துவமனையில் கிட்னி திருட்டு நடைபெற்றுள்ளது. பேருந்தில் பெண்களை இலவசமாக அனுமதித்துவிட்டு ‘ஓசி ஓசி’ எனச் சொல்லிக்காட்டுகிறார்கள். அனைத்து மகளிருக்கும் ₹1,000 தருவதில்லை. ஆனால், கொடுத்த சிலருக்கும் சொல்லிக் காட்டுகிறார்கள்.

ஆனால், கல்வி, மின்சாரம், மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளை த.வெ.க செய்துகொடுக்கும். பெண்கள் பாதுகாப்பிலும் சட்டப் பிரச்னைகளிலும் No Compromise. நடைமுறைக்கு எது சாத்தியமோ அதையே நாங்கள் சொல்வோம். வெற்றி நிச்சயம். மீண்டும் சந்திக்கும் வரை நன்றி என்று கூறினார் விஜய் அவர்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *