அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களால் தான் உயர் கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என எடப்பாடி பழனிச்சாமி கூறுவது பொய் பிரச்சாரம். அது தமிழகத்தில் எடுபடாது – திருச்சியில் கோவி.செழியன் பேட்டி
திருச்சியில் உள்ள தந்தை பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரி 12 வது பட்டமளிப்பு விழா இன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் பேசிய கோவி.செழியன்,
நான் ஆரம்பக் கல்வி முதல் முனைவர் பட்டம் வரை படித்த பள்ளி கல்லூரிகள் அனைத்தும் அரசு பள்ளி கல்லூரிகள் தான். தமிழகத்தில் மொழி போராட்டம் என்றாலும், இட ஒதுக்கீடு போராட்டம் என்றாலும் உரிமைக்கான போராட்டம் என்றாலும் அதில் முதலிடத்தில் இருக்கும் கல்லூரி திருச்சி தந்தை பெரியார் கல்லூரி. கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக நாம் நம் உரிமைகளை வென்று இருக்கிறோம்.
இன்று பட்டம் பெறுபவர்களின் மாணவர்களை விட மாணவிகள் அதிகம் இதுதான் தந்தை பெரியார் செய்த புரட்சி. பெரியார் விரும்பியதை இன்று உயர்கல்வித்துறை செய்து வருகிறது.ஒரு சாராருக்கு மட்டுமே கல்வி என இருந்த நிலையில் இன்று கல்வி அனைவரும் என்கிற நிலைக்கு வந்துள்ளோம். அதற்கு உழைத்த அனைத்து தலைவர்களையும் நாம் நினைவு கூற வேண்டும்.
கல்வி கற்பது அவன் தொழில் உன்னுடைய தொழில் அடிமையாக இருப்பது தான் கல்வி கற்றுக் கொடுப்பதை காதில் கேட்டால் கூட காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்ற வேண்டும் என கூறியது மனதர்மம்.
எந்த சமுதாயத்திற்கு கல்வி கூடாது என கூறினார்களோ அந்த சமுதாயத்தை சேர்ந்த ஒருவன் மூன்று முறை ஒரே தொகுதியில் நின்று வெற்றி பெற்று இன்று உயர்கல்வி துறை அமைச்சராக இருக்கிறேன் என்றால் இதற்கு உழைத்த தலைவர்களும் கொள்கையும் தான் காரணம். தந்தை பெரியாரின் போராட்ட வெற்றி அம்பேத்கர் வகுத்து கொண்ட சட்டமும் தான் காரணம்.என்றைக்கும் அழிக்க முடியாத சொத்து கல்வி மட்டும் தான்.
இந்தியை கற்றுக் கொண்டால்தான் தமிழகத்திற்கு தேவையான நிதியை ஒதுக்கவோம் என ஒன்றிய அரசு கூறும்போது பத்தாயிரம் கோடி தந்தாலும் நாங்கள் இந்தி திணிப்பை அனுமதிக்க மாட்டோம் என உறுதியாக நின்றவர் முதலமைச்சர் மு க ஸ்டாலின்.எல்லோருக்கும் கல்வி கிடைத்து விடக்கூடாது என ஒரு கூட்டம் தொடர்ந்து செயல்படுகிறது. அந்த எண்ணம் திராவிட கொள்கையை சிதைக்க பார்க்கிறது இருந்த போதும் அதை காப்பாற்றும் முதலமைச்சராக நம்முடைய முதலமைச்சர் இருந்து வருகிறார்.
உயர்கல்வியை கண்ணாக காக்ககூடிய முதல்வராக நம்முடைய முதல்வர் மீண்டு வருகிறார்.தமிழகத்தில் பெயருக்கு பின்னால் ஜாதியை போட்டுக் கொண்ட நிலை மாறி இன்று அவரவர் படித்த படிப்புகளை பட்டங்களாக போட்டுக் கொள்ளும் நிலை வந்துள்ளது ஜாதியை ஒழித்த இயக்கம் திராவிட இயக்கம்.
தந்தை பெரியார் அறிஞர் அண்ணா கலைஞர் உள்ளிட்டோர் வகுத்த கொள்கைதான் தமிழகத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க காரணமாக உள்ளது.பாடத்திட்டங்களில் மூடநம்பிக்கைக்கு இடமில்லை அறிவியல் ஆராய்ச்சிக்கு தான் முக்கியத்துவம் என கூறும் புரட்சியாளராக நம்முடைய முதலமைச்சர் செயல் பட்டு வருகிறார்.
எந்தக் கல்லூரியில் நான் தேர்வு கட்டணம் கட்ட வரிசையில் நின்றானோ அதே கும்பகோணத்தில் இன்று கலைஞர் பெயரை பல்கலைக்கழகம் கட்ட முயற்சியில் இறங்கி உள்ளேன்.சாதிக்க முடிந்த தொண்டர்களையும் எதையும் சாதிப்பும் கொள்கைகளையும் கொண்ட இயக்கம் தான் திராவிட இயக்கம் என்றார்.நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கோவி.செழியன்,
கலை அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரிகளில் கடந்த ஆண்டை விட மாணவர் சேர்க்கை இந்தாண்டு 25 சதவீதம் அதிகரித்துள்ளது.
புதிதாக 15 கலை அறிவியல் கல்லூரிகளில் தொடங்கியுள்ளோம்
பாலிடெக்னிக் கல்லூரிகளில் 7புதிய பாடப்பிரிவுகளை அறிமுகம் செய்துள்ளோம் அதிலும் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.
தமிழ் புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம் போன்ற திட்டங்களால் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எல்லா நிலைகளிலும் உயர் கல்வியை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்ல முதலமைச்சர் ஆக்கமும் ஊக்கமும் தந்து வருகிறார்.
முன்பெல்லாம் இந்தியாவிலேயே அதிகம் படித்தவர்கள் உள்ள மாநிலம் எது என்று கேட்டால் கேரளா என்பார்கள் ஆனால் அந்த நிலை மாறி இன்று எல்லோரும் தமிழகம் என கூறுகிறார்கள்.அதிமுக ஆட்சியில் உயர்கல்விக்கு கொடுத்த முக்கியத்துவத்தால் தான் தற்பொழுது தமிழகத்தில் உயர்கல்வி சிறந்த நிலையில் உள்ளது என எடப்பாடி பழனிச்சாமி கூறுவது பொய் பிரச்சாரம் அவர்கள் ஆட்சியில் இடைநீற்றல் எவ்வளவு ?
உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு, உயர்கல்விக்கு எவ்வளவு நிதி ஒதுக்கினார்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் அதனுடைய எண்ணிக்கை எவ்வளவு என்பது குறித்து கணக்கிட்டாலே உண்மையான விவரம் தெரியும்.
தனிமனித பொருளாதார வளர்ச்சியில் இரட்டை இலக்கத்தை தமிழகம் அடைந்துள்ளது.
தமிழக அரசு கூறுவது ஒன்றிய அரசின் தரவுகளின் அடிப்படையில் கூறுகிறார்கள் மாற்று கட்சியினர் கூறுவது பொய் பிரச்சாரம் அது தமிழகத்தில் எடுபடாது என்றார்.
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
“அதிமுக ஆட்சியின் உயர்கல்வி பங்களிப்பு வெறும் பொய் – அமைச்சர் கோவி.செழியன் கடும் விமர்சனம்”

Comments