குழந்தைகள் நடக்கப் பழகி ஒட ஆரம்பித்த அடுத்த கட்டமாக அனைத்து குழந்தைகளுக்கும் நாம் கற்றுக் கொடுக்கும் ஒரு பழக்கம் என்றால் மிதி வண்டி ஓட்டுவது தான். மிதிவண்டி கற்றுக் கொள்ளாமல் குழந்தை பருவம் முழுமை அடைவதில்லை. சாதாரணமாக இந்த மிதிவண்டியை நம் கடந்து விட முடியாது 19 நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே மிதிவண்டிகள் நமக்குமான தொடர்பு நீண்டு கொண்டிருக்கிறது. இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருக்கும் இந்த மிதிவண்டிள் தொடக்க காலத்தில் போக்குவரத்துக்கான மிக முக்கிய வழிமுறையாக இருந்தது.

இன்றைக்கு போக்குவரத்து வாகனங்கள் வளர்ச்சி பல வகைகளில் இருந்தாலும், மிதிவண்டிகள் தனித்துவம் இன்றும் மாறாமல் இருக்கின்றது. பல ஐக்கிய  நாடுகளில் 1870களில் பல சைக்கிள் கிளப்புகள் செழித்து இருந்தன. 
மிதிவண்டியின் பயன்கள் இன்றளவும் தேவைக்குறியதாக இருந்து கொண்டிருக்கிறது ஆரம்பத்திலிருந்தே என்றும் சைக்கிள்களில் பல பயன்பாடுகள் இருக்கின்றன.

ஒரு பயனுள்ள வழியில் போக்குவரத்து சைக்கிள் பயணம், சைக்கிள் சுற்றுப்பயணம், உடல்தகுதி மற்றும் விளையாட்டு போன்ற பொழுதுபோக்கு நோக்கங்களுக்காகவும் இந்த சைக்கிள் பயன்படுத்தப்படுகிறது. நம் வாழ்வோடு இணைந்த மிதிவண்டிகளை பெருமைப்படுத்தும் விதமாகவும் இதனுடைய பயன்பாட்டை உலக மக்களுக்கு உணர்த்திட 2018 ஏப்ரலில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் 193 நாடுகளில் ஒப்புதலோடு ஜூன் 3 உலக மிதிவண்டி தினமாக அனுசரிக்கப்படுகிறது.

ஒரு பொழுது போக்காக மட்டுமே இன்றி இதனை உடற்பயிற்சியாகவும் இன்றைக்கு பலரும் தொடர்ந்து செய்து வருகின்றனர். சைக்கிள் ஓட்டுவது நல்லதொரு உடற்பயிற்சி உடலுக்கும், மனதிற்கும் நல்ல ஒரு உற்சாகத்தையும், உடல் வலுவையும் ஏற்படுத்துகின்றது. இந்த உலக சைக்கிள் தினத்தில் சைக்கிளிங் செய்யும் திருச்சி பிரசாந்த் சைக்கிளிங் பற்றிய பல சுவாரஸ்யமான தகவலை நம்மோடு பகிர்ந்துள்ளார்.

குழந்தைகளுக்கு முதலில் வாங்கி கொடுப்பது மிதிவண்டிகள் குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களும் மிதிவண்டியை பயன்படுத்துவது மிக நல்லது. மிதிவண்டி ஓட்டுதல் என்பது மிகச்சிறந்த உடற்பயிற்சியும் கூட நமது உடல் ஆரோக்கியத்திற்கு ரத்த ஓட்டத்திற்கு மிகவும் சிறந்தது. சைக்கிளிங் செய்பவர்களின் எண்ணிக்கை இன்றைக்கு அதிகரித்துள்ளது மகிழ்ச்சிக்குரிய ஒன்று. அதன் மூலம் பல சாதனைகளையும் செய்து வருகின்றனர். அந்த வகையில் மாணவர்களுக்கு போட்டிகளும் நடத்தி வருகின்றோம். 8 ஆண்டுகளுக்கும் மேலாக சைக்கிளிங் செய்து கொண்டிருக்கிறேன் இது ஒரு சிறந்த உடற்பயிற்சியும் தான் மனதிற்கு நல்லதொரு புத்துணர்வையும் கொடுக்கும்.

திருச்சியை பொருத்த வரை பலர் ஆர்வமாக கலந்து கொள்கின்றனர். ஒரு விசாலமான பகுதியில் நாம் இந்த பயிற்சிகளை செய்யும் பொழுது சுவாசம் சீராகிறது. ஆனால் இளைஞர்கள் மத்தியில் இன்றைக்கு சைக்கிள் பயன்படுத்தும் பழக்கம் குறைந்து விட்டது. 10 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு சைக்கிளில் தான் பயணம் செய்தனர். தற்போது அது குறைந்து வருவதாக கருதுகின்றேன்.

உடற்பயிற்சி கூடங்களுக்கு சென்று உடற்பயிற்சி செய்வது நல்லது எனினும் தினமும் சைக்கிள் மிதிப்பது மிகச்சிறந்த உடற்பயிற்சி. தொடர்ந்து நாம் பயணிக்கும் போது அது நம் பழக்கமாகவும் மாறி விடும் அதனால் பல நன்மைகள் உண்டு என்பதை இளைஞர்கள் புரிந்து செயல்பட வேண்டும். 19ம் நூற்றாண்டில் தொடங்கி 21ம் நூற்றாண்டு வரை பல மாற்றங்கள் மோட்டார், பேட்டரி சைக்கிள் என்று பல வகைகள் வந்தாலும், மிதிவண்டி உருவான மகத்துவமும் அதன் பயன்களும் இன்றளவும் குறையாமல் இருக்கின்றது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/L02NDTkd6Wg4hHDkNo6EQC

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           70
70                           
 
 
 
 
 
 
 
 

 04 June, 2021
 04 June, 2021





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments