அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோவிலில் ரூபாய்.4.63 கோடியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அமாவாசை மண்டபம் மற்றும் குங்கும கூடம் கட்டிடத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து 25.61 கோடி மதிப்பீட்டில் பெருவளை வாய்க்கால் இரு கரைகளிலும் சாலை மற்றும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி, புதிய நுழைவாயில் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.
இந்தநிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் குழு தலைவர் வி.எஸ்.பி.இளங்கோவன், சமயபுரம் திமுக நகர செயலாளர் ஜிபிடி ராஜசேகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments