Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

எந்த பணிக்கான தேர்வு எழுதுகிறோமோ அந்த அதிகாரியாக நினைக்க வேண்டுமென ஆட்சியர் அறிவுரை

திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் இன்று (01.06.2024) நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் TNPSC Group 4 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு தேர்வை எவ்வாறு வெற்றிகரமாக எதிர்கொள்வது என்பது குறித்து அறிவுரைகள் வழங்கி அவர்களுடன் கலந்துரையாடினார். இந்நிகழ்வில், பயிற்சி ஆட்சியர் ரமேஷ்குப்தா, , மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார், N.R. I.A.S அகாடமி இயக்குநர் விஜயாலயன், வாசகர் வட்ட தலைவர் கோவிந்தசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது……. குரூப் 4 தேர்வுக்கான பாடத்திட்டத்தை சரியாக தெரிந்து கொள்ளுங்கள். பாடத்திட்டத்தை தெரிந்து கொள்ளாமல் படித்துக் கொண்டிருந்தால், சிலபஸில் இல்லாத விஷயங்களை நீங்கள் கூடுதலாக படிக்க நேரிடும். இதனால் உங்களின் நேரவிரயத்தை தவிர்க்க முடியாது. எதைப் படிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தால், நீங்கள் தயாராவதற்கு எளிமையாக இருக்கும். 

பாடத்திட்டத்தை தெரிந்து கொண்ட நீங்கள் ஒவ்வொரு பாடத்திட்டத்துக்கும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும். அதாவது சரியாக திட்டமிடல் வேண்டும். அதற்கேற்ப நாள்தோறும் பயிற்சி எடுக்க வேண்டும். படிக்க வேண்டும், அதனை திரும்ப ரிவிஷன் செய்ய வேண்டும்.தமிழ் பாடத்திட்டத்தை நீங்கள் தேர்ந்தெடுத்தால் அதில் இருக்கும் இலக்கணம் செய்யுள் ஆகியவற்றை பிரித்து மனப்பாடம் செய்ய வேண்டும். அதேபோல் சமூக அறிவியல், கணக்கு உள்ளிட்ட பாடங்களையும் படிக்க வேண்டும்.

படித்துக் கொண்டிருக்கும்போதே நாள்தோறும் பயிற்சி எடுப்பது அவசியம். அதிகமாக படிக்கும்போது மறப்பது இயல்பு என்பதால், ரிவிஷன் செய்து கொள்வது அவசியம். தேர்வுக்கு குறைவான காலம் மட்டுமே இருக்கும் சூழலில் படிக்கும் பாடங்களில் கட்டாயம் தேர்வு எழுதி உங்களை நீங்கள் சுயபரிசோதனை செய்து கொள்வது அவசியம். அப்போது தான் குழப்பமில்லாமல் இருப்பீர்கள்.

தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை நேரில் சந்தித்து உரையாடும் வாய்ப்பு இருந்தால் கட்டாயம் அதனை செய்யுங்கள். அவர்களிடம் இருந்து உங்களை நீங்கள் தயார் செய்து கொள்வதற்கு கட்டாயம் ஏதேனும் ஒரு ஐடியா கிடைக்கும். பேசும்போது உங்களுக்கு புதிய ஐடியா மற்றும் பாடத்திட்டம் பற்றிய தெளிவு, கேள்விகளை அணுகும்முறை உள்ளிட்டவைகளுக்கான ஆலோசனை கிடைக்கும். இவையெல்லாம் உங்களை தெளிவாக தேர்வை அணுகும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கும். இந்த டிப்ஸ்கள் பின்பற்றினால், தேர்வுக்கு தயார் ஆவதற்கு நிச்சயம் உதவும். 

பாடத்திட்டத்தை முழுமையாக அறிந்துகொள்ளுங்கள் முறையான திட்டமிடுதல் மற்றும் முறையான பயிற்சிவெற்றிக்கு வழி வகுக்கும். தமிழகம் முழுவதும் 20 லட்சம் பேர் எழுத உள்ள தேர்வில் வெற்றி பெறுபவர்கள் என்றால் மிக குறைவாகவே இருப்பர். இதற்கு காரணம் அவர்கள் மட்டுமே இந்த தேர்வில் கவனமாகவும் முறையான திட்டமிடலும் சரியான பாடத்திட்டத்தை முழுமையாக அறிந்து வைத்து என தேர்விற்கான அனைத்து செயல்களையும் சரியான முறையில் செய்திருப்பர்.

எந்த பணிக்கான தேர்வை எழுதுகிறோமோ அந்த துறை அலுவலராகவே நம்மை நினைத்துக் கொண்டு படிக்கும் பொழுது கூடுதல் தன்னம்பிக்கையும் உண்டாகும். திருச்சியில் மட்டும் 312 மையங்களில் 85 ஆயிரம் பேர் தேர்வு எழுத உள்ளனர் என்றார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *