திருச்சி கருமண்டபம் ஜெயா நகரை சேர்ந்த தம்பதியினர் இருவர் காரில் ஜங்ஷன் அரிஸ்டோ மேம்பாலத்தில் வந்துகொண்டிருந்தபோது, எதிரே வந்த கண்டைனர் ஏற்றிச்சென்ற லாரி மேம்பாலத்தில் திரும்பியது.

அப்போது சரிவர பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் எடுத்துச்செல்லப்பட்ட லாரியில் இருந்த கண்டைனர் இரும்புபெட்டி பக்கவாட்டில் சரிந்து கார்மீது விழுந்தது. இதில் காரின் முன்புறம் அப்பளமாக நசுக்கியதுடன், காரில் வந்த தம்பதியினர் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
இதனையடுத்து போக்குவரத்து போலீசார் துரிதமாக செயல்பட்டு போக்குவரத்தை நிறுத்தி பின்னர், கிரேன் மூலம் கண்டெய்னர் மற்றும் கார் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்தை சீர்செய்தனர்.

இந்த விபத்து காரணமாக மன்னார்புரத்திலிருந்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் வரையிலும், அதேபோல கருமண்டபம்வரையிலும் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக கடும் போக்குவரத்துநெரிசல் ஏற்பட்டது
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments