திருச்சிராப்பள்ளி பஞ்சப்பூர் மேலக்குளம், பிராட்டியூர் குளம் மற்றும் கள்ளிக்குடி குளங்களில் முட்செடிகளை அகற்றி தூர்வாரி நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காகநேற்று (25.03.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் மா பிரதீப் குமார் அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.அபிராமி, வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன், ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் தமிழ்ச்செல்வன், உதவி பொறியாளர் ராஜரத்தினம், மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகம், வட்டாட்சியர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அரசு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn






Comments