இந்தியாவின் 76 வது குடியரசு தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி சுப்ரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தேசிய கொடி ஏற்றி மூவர்ண பலூன்களை பறக்க விட்டு, சமாதானத்தின் அடையாளமாக இரு வெண் புறாக்களை பறக்க விட்டார்.
அதைத் தொடர்ந்து காவல்துறையின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். பின்னர் சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். இவ்விழாவில் காவல் துறையை சேர்ந்த 91 காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கமும் பாராட்டு பத்திரமும் வழங்கபட்டது. மேலும் திருச்சி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 426 அரசு ஊழியர்களுக்கு பாராட்டு பத்திரங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கி பாராட்டினர்.
மேலும் 28 பயனாளிகளுக்கு ரூபாய்..52 லட்சத்து 82 ஆயிரம் 802 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்த விழாவில் திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி, மத்திய மண்டல ஐஜி ஜோஷி நிர்மல் குமார், டி ஐ ஜி வருண்குமார், எஸ்பி செல்வநாகரத்தினம், துணை ஆணையர்கள் உன்கிட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசு துறையை சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments