தமிழ்நாடு அரசு மாவட்ட ஹாஜிக்களின் கூட்டமைப்பு சார்பில் அரசு ஹாஜிக்களின் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றதில், தமிழகம் முழுவதுமிருந்து 24 மாவட்ட அரசு ஹாஜிக்கள் கலந்துக்கொண்டிருந்தனர்.
பள்ளிவாசல்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர்கள் விளம்பரம் செய்து வரும் நிலையில் வக்புவாரியத்தில் பதிவு செய்து பணியாற்றுபவர்களுக்கு மட்டுமே இதுவழங்கப்படும் என்ற வரைமுறை உள்ள நிலையில், உலமாக்கள் நலவாரியத்தில் பதிபுபெற்ற 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உலமாக்கள்
அனைவரும் பயன்பெறும் வகையில் மானியத்தில் இருசக்கர வாகனம பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மத ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தைப் பேண மாவட்டந்தோறும் ஆட்சியர் தலைமையில் மதநல்லிணக்க குழுவை அமைக்க வேண்டும், உலமா மற்றும்; வக்புவாரியத்தில் பதிவுசெய்த உலமாக்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி தரவேண்டுமெ அரசுக்குகோரிக்கை விடுத்து தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது.
தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் என்பது வரலாற்றுக்கு மாற்றாக படம் எடுக்கப்பட்டு, மதச்சார்பின்மைக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் இத்திரைப்படத்தை காண விடுமுறை வழங்குவது மற்றும் அனைவரும் இப்படத்தை காண வற்புறுத்துவது என்பது சிறுபான்மை மக்களுக்கு எதிராக அனைவரையும் தூண்டிவிட்டு இன அழிப்புக்கு முன்னோட்டமாக உள்ளதாகவும் குற்றம்சாட்டினர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.co/nepIqeLanO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments