திருச்சி மாநகராட்சியில் மொத்தம் 65 வார்டுகள் உள்ளது .இந்த 65 வார்டுகள் ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் பகுதியிகளை உள்ளடக்கிய 13 வார்டுகள் மண்டலம் எண் ஒன்று என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது .இன்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கோட்ட தலைவர் ஆண்டாள் ராம்குமார் காலை ஸ்ரீரங்கம் கோட்டத் தலைவர் அலுவலகத்தில் பதவி ஏற்றுக் கொள்வதாக இருந்தது. இந்நிலையில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு ,மாநகர மேயர் அன்பழகன் உள்ளிட்டோர் சரியாக 10:25 மணிக்கு ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்திற்கு வந்து விட்டனர்.
ஏற்கனவே திட்டமிட்டபடி 10 30 மணிக்கு பதவியேற்பு நிகழ்வு நடைபெறும் என இருந்தது. அமைச்சர் காரை விட்டு இறங்கிய போது பயங்கர சத்தத்துடன் ஒரு வெடியை வைத்தனர். மிகவும் கோபமடைந்த அவர் அருகில் வீடுகளும் அரசு மருத்துவமனையும் உள்ளது ஏன் இப்படி செய்கிறீர்கள் என கடுமையாக கட்சியினரிடம் கடிந்துகொண்டார். பிறகு உள்ளே சென்று அமர்ந்திருந்ததார்.

புதிதாக பதவி ஏற்கக்கூடிய ஆண்டாள் ராம்குமார் வரவில்லை. அமைச்சர் கே என் நேரு மாநகர மேயர் அன்பழகன் மாவட்ட செயலாளர் வைரமணி உடன் ஏழு மாமன்ற உறுப்பினர்களும் காத்துக் கொண்டிருந்தனர். தாமதமானது அப்செட்டான அமைச்சர் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றார். கோட்டத் தலைவர் அம்மா வரமாட்டார்களா காத்திருக்க வேண்டுமா என கடுகடு முகத்துடன் பேசிவிட்டு விருட்டென காரில் ஏறி பறந்துவிட்டார் .திமுக மூத்தஅமைச்சர்களில் ஒருவரும் முதன்மை செயலாளருமான கே.என்.நேரு கோட்டதலைவர் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள வந்த பொழுது காத்திருந்த சம்பவம் திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa
#டெலிகிராம் மூலமும் அறிய..






Comments