வடகிழக்கு பருவமழை குறைந்து தற்போது பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுகிறது.

திருச்சியில் இன்று காலை 8 மணி வரையிலும் அதிகளவு பனிமூட்டம் காணப்பட்டதால், திருச்சி – சென்னை நெடுஞ்சாலை மற்றும் புதுக்கோட்டை சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் சாலைகளில் வெண்ணிறம் போல காட்சியளித்தது. தொலைவில் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் அதிகரித்து காணப்பட்டது, இதனால் வாகன ஓட்டிகள் முகப்புவிளக்குகள் எரியவிட்டபடி சென்றனர்.

அதேநேரம் கடந்த சிலநாட்களாக காலை மற்றும் இரவு, நேரங்களில் நிலவும் கடும் குளிரினால் மக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பலரும் சளி மற்றும் இருமல் உள்ளிட்ட நோய் தொல்லைகளுக்கு ஆளாகியுள்ளனர்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments