Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

கண்ணீர் விட்டு அழுத முன்னாள் எம்.பி

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகம் கூட்டத்திற்கு முன்னாள் எம் பி யும் புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான ப.குமார் தலைமை வகித்தார். பின்னர் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் பேசுகையில்…. கடந்த சட்டமன்றத் தேர்தலில் டெல்டா மாவட்டங்களில் நாம் தோற்றத்துக்கு காரணம் நான் வைக்க கூடாதவர்களிடம் கூட்டணி வைத்தது தான். திருவெறும்பூர் தொகுதியில் உள்ள 65 ஆயிரம் சிறுபான்மையினர் வாக்குகள் நமக்கு கிடைக்காமல் போனது.

இதன் மூலம் திருவெறும்பூர் தொகுதியில் மட்டும் பிஜேபி கூட்டணியால் 80 ஆயிரம் வாக்குகள் நமக்கு கிடைக்கவில்லை. நாம் வெற்றி வாய்ப்பை திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது தொகுதிகளில் இழந்தோம். மணப்பாறையில் 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றோம். அதேபோல் லால்குடி, திருவெறும்பூர் தொகுதியிலும் தோற்றோம். இதனால் கடந்த மூன்று ஆண்டுகளாக நாம் தொண்டர்களும் நிர்வாகிகம் எவ்வளவு கஷ்டப்பட்டு வருகிறோம் என கூறிய குமார் கண்ணீர் அழுததால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நான் பட்ட அசிங்கத்தை திரும்ப பெறாமல் இருக்க இந்த தேர்தலில் நாம் ப.கருப்பையாவை 100% வெற்றி பெறுவதற்கு வேண்டிய வேலைகளை செய்ய வேண்டும். தம்பி கருப்பையா தீவிர உழைப்பாளி 2016 ஆம் ஆண்டு பாசறை செயலாளராக இருந்தார் தற்பொழுது வாக்கு கேட்பதற்காக ஸ்டிக்கர்கள் அடிக்கப்பட்டுள்ளது 

அந்த ஸ்டிக்கரில் வேட்பாளர் புகைப்படம் இல்லாமல் அடிக்கப்பட்டுள்ளதற்கு காரணம் வேட்பாளர் அறிவிப்பதற்கு முன்பு ஐம்பதாயிரம் ஸ்டிக்கர்கள் அடித்து விட்டதாகவும், தமிழகத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி தொகுதியாக முதலாவது தொகுதியாக திருச்சி பாராளுமன்றம் இல்லாமல் போனாலும், இரண்டாவது இடத்தை யாவது நாம் பெற வேண்டும். கழக பதவியிலிருக்கும் கருப்பைய்யா அரசுப் பதவிக்குப் போட்டியிடுகிறார். பிரிலிமினரி தேர்வு போல இதில் நாம் வெற்றி பெற்றாக வேண்டும். அப்பொழுது தான் வரும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியும். கடந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்ததிலிருந்து 2024 தேர்தலுக்காக உழைத்து வருகிறோம். தேர்தல் வாக்குறுதிகளைப் பொய்யாக கூறியே ஆட்சிக்கு வந்த திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் பொய்யாகவே கூறியுள்ளனர்.

சிலிண்டர் விலையை ரூ.500, பெட்ரோல் ரூ.75, டீசல் விலை 65 என குறைப்பதாக பொய்யான வாக்குறுதி கொடுத்துள்ளனர். அதேப்போல் திருச்சி நாம் கொண்டு வர முயற்சி செய்த பொன்மலை ரயில்வே ஒர்க் ஷாப் திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் 14 கிலோமீட்டர் தூரத்திற்கு சர்வீஸ் சாலையை, அதை அவர்கள் பறக்கும் சாலையாக மாற்றுவதாக கூறியுள்ளனர். அதற்கு நாம் ஏற்கனவே 84 கோடி நிதி ஒதுக்கி உள்ளோம். மம்தா ரயில்வே துறை அமைச்சராக இருந்த பொழுது தஞ்சை கந்தர்வ கோட்டை புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு ரயில்வே பாதை அமைப்பதற்கு நான் பேச்சுவார்த்தை நடத்தினேன். அதை தான் தற்பொழுது அவர்கள் கூறியுள்ளார்கள் என்றார்.

இறுதியாக வேட்பாளர் கருப்பைய்யா தனது அறிமுகவுரையில்…. களத்தில் நன்கு உழைப்பேன். பெற்ற டோக்கனுக்கேற்ப ஆடி களமாடுவேன். தன் கட்சி, தந்தையைக் காப்பாற்ற எதிர்க்கட்சி வேட்பாளர் போட்டியிடுகிறார். ஆனால், அதுபோல நான் தனிப்பட்ட விஷயங்களுக்காக போட்டியிடவில்லை. நம்  மக்களுக்காக பணியாற்றவே போட்டியிடுகிறேன். உங்களது குரலாய் நாடாளுமன்றத்தில் ஒலிப்பேன் என்றார்.  இக்கூட்டத்தில் அமைப்புச் செயலாளர்கள் மனோகரன், ரத்தினவேல், வளர்மதி, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்துப் பேசினர். நிர்வாகிகள் பாலசுப்ரமணியன், கும்பக்குடி முருகானந்தம், முத்துக்குமார், ரோஷன், பாஸ்கர், சாருமதி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *