Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் தி.மு.க மாநாட்டிற்கு பந்தல் கால் நடும் விழா – அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு

திமுக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் என்கிற தலைப்பில் மாநாடு மிகப்பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது.
திருச்சியில் நடைபெறும் இந்த மாநாட்டில் சுமார் 10 லட்சம் பேர் கலந்து கொள்கின்றனர்.


இந்நிலையில் மாநாட்டுப் பணிகளை தொடங்கும் விதமாக திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை சிறுகனூரில் மாநாடு நடைபெறும் இடத்தில் இன்று பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு,திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் மாநாட்டு பணிகளை தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் காடுவெட்டி தியாகராஜன், பழனியாண்டி, செளந்திரபாண்டியன், ஸ்டாலின் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு,
மார்ச் 8 ஆம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள திமுக மாநாடு இதற்கு முன்பு நடந்த மாநாடுகளை காட்டிலும் சிறப்பாக இருக்கும் 500 ஏக்கர் பரப்பளவில் அந்த மாநாடு நடைபெற உள்ளது. முதலமைச்சர் மு க ஸ்டாலினை தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலமைச்சராக்க வேண்டும் என்கிற அடிப்படையில் இந்த மாநாடு சிறப்பாக நடைபெறும்.
திருச்சியை இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம், இது குறித்து தேர்தல்

அறிக்கை தயாரிப்பு குழுவிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
ஒரு கட்சித் தலைவர் மற்றொரு கட்சி தலைவரை சென்று சந்திப்பதை இயல்பானது. அதுபோல்தான் கனிமொழி ராகுல் காந்தியை சந்தித்துள்ளார். அவர் எடப்பாடி பழனிச்சாமி போல் முகத்தை கர்சிப்பால் மூடிக்கொண்டு யாரையும் சென்று சந்திக்கவில்லை வெளிப்படையாக சென்று தான் சந்தித்தார் என்றார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *