திருச்சி விமான நிலையம் வருகை புரிந்த முதலமைச்சர் ஸ்டாலினிடம் உதவி கோரிய சிறுமியின் கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவிட்டதன் பெயரில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுமியின் தாயாரிடம் மனுவை மாவட்ட ஆட்சியர் பெற்றுக் கொண்டார். விசாரணையில் தாயார் கூறுகையில்,…. கோயம்புத்தூரில் வசித்து வரும் இவரின் கணவர் லித்தோஸ் வேலை செய்துள்ளார்.
கடன் தொல்லையால் கணவர் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து தங்களது குடும்ப வருமானத்திற்காக திருச்சியில் உள்ள கணவரின் சொத்துக்களை விற்று அதிலிருந்து பங்குகளை கேட்டு மனு அளித்துள்ளனர். இவர்களுக்கு என்று திருச்சியில் எவ்வித தனிப்பட்ட சொத்துக்கள் இல்லாததால் இவர்களின் வருமானத்தின் அடிப்படையில் கோயம்புத்தூரில் வீடு வழங்குவதற்கு கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும் குழந்தைகளின் கல்வி செலவுகளை திருச்சி மாவட்ட ஆட்சியர் மாவட்ட நிதி குழுவில் இருந்து அளிக்கப்படும் என்று மனுவை பெற்றுக் கொண்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn






Comments