திருச்சியில் தீபாவளியையொட்டி ஏராளமானோர் பட்டாசுகள் வெடித்து மகிழ்ந்தனர்.அப்போது காற்று மாசுபாட்டின் குறுகியீட்டு அளவு கணக்கீடப்பட்டது.தேசிய ஒலி மாசுபாடு கணக்கீட்டின் படி…
திருச்சியில் பகல் நேரத்தில்  65.0 டெசிபிள், 
இரவு நேரத்தில் 55.0 டெசிபிள் சராசரியாக பதிவாகும்.
கடந்த 24ஆம் தேதி காலை 6 மணி முதல் 25 ஆம் தேதி காலை 6:00 மணி வரை, திருச்சி தில்லை நகரில் ஒலி மாசுபாட்டை ஆய்வு செய்து கணக்கிடு செய்ததில் , 87.4 டெசிபிள் பதிவானது கண்டறியப்பட்டது.
அதே போல திருச்சியில் காற்று தர குறியீட்டு அளவு சராசரியாக 46 புள்ளிகள் 130 புள்ளிகள் வரை இருக்கும்.தீபாவளியையொட்டி உறையூர் பகுதியில் கணக்கிட்டதில் 111 புள்ளிகளும், தென்னூரில் 130 புள்ளிகளும் பதிவாகியுள்ளது.

அன்றைய நாள் திருச்சியில் காற்றின் ஈரப்பதம் அதிகமாகவும், காற்றின் வேகம் குறைவாகவும் இருந்ததால், பட்டாசு வெடிப்பின் புகை வான்வெளிக்கு பரவவில்லை என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய திருச்சி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO



            
            
            
            
            
            
            
            
            
            


Comments