போராட்டக் களத்திலும் மலர்ந்த போலீஸ்காரர்களின் மனிதம்!

போராட்டக் களத்திலும் மலர்ந்த போலீஸ்காரர்களின் மனிதம்!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்டிபிஐ கட்சியினர் திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் பாலக்கரை பாலத்தில் இருந்து வரும் வாகனங்களை மார்க்கெட் ரோடு வழியாக காவல்துறையினர் திருப்பி விட்டனர்.

அப்போது அவ்வழியாக சைக்கிளில் வந்த முதியவர் ஒருவர் வாகனத்தை நிறுத்த முடியாமல் நிலை தடுமாறி கீழே விழுந்தார். உடனடியாக ஓடிச்சென்று அவரை மீட்ட காவல் துறையினர் அவருடைய சைக்கிளையும் அவரையும் ஓரமாக அழைத்து வந்தனர்.

Advertisement

அந்த முதியவருக்கு தண்ணீர் வேண்டுமா எனக் கேட்ட காவலர்கள், அவரை பத்திரமாக அனுப்பி வைத்தனர். போராட்டங்களுக்கு மத்தியிலும் மலர்ந்த போலீஸ்காரரின் மனித நேயம் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடைய செய்தது.

Advertisement