Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

கஞ்சாவை கடத்தி வந்த நபர் தலைக்காவலரை காரில் மோதி தப்பிக்க முயன்றவருக்கு 6 ஆண்டுகள் சிறைதண்டனை

திருச்சி மாநகர காவல் ஆணையர் M.சத்தியப்பிரியா, திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச் சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கைத் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

கடந்த 26.07.2021ந் தேதி காந்திமார்க்கெட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சென்னை பைபாஸ், பிச்சைநகர் சந்திப்பில் காவல் உதவி ஆய்வாளர் கருணாகரன் தலைமையில், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் கணேசன், மனோகரன் மற்றும் தனிப்பிரிவு அலுவலில் உள்ள தலைமை காவலர் சரவணன் மற்றும் இன்ஸ்டின் ஆகியோருடன் குற்றத்தடுப்பு நடவடிக்கைக்காக வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது வெள்ளை நிற TN 52 T 6484 என்ற எண் கொண்ட TATA INDICA V2 நான்கு சக்கர காரில் 21கிலோகிராம் கஞ்சாவை கடத்தி வந்த புதுக்கோட்டை மாவட்டம், இறைவன்நகரை சேர்ந்த முகமது ஹனீபா 42/23 த.பெ.முகமது யூசப் என்பவர் காரை நிறுத்தாமல் சென்றும், தலைமை காவலர் சரவணன் என்பவரை காரில் இடித்து காயப்படுத்தி சென்றதாக உதவி ஆய்வாளர் கருணாகரன் கொடுத்த புகாரின்பேரில், எதிரி முகமது ஹனீபா கைது செய்யப்பட்டு, எதிரி மீது காந்திமார்க்கெட் காவல் நிலையத்தில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேற்கண்ட சம்பவத்தில் வலது காலில் காயமடைந்த தலைமை காவலர் சரவணனுக்கு மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. மேற்கண்ட வழக்கில் தலைமை காவலர் சரவணனின் வீரதீர செயலுக்கு தமிழக காவல்துறை இயக்குநர் நேரில் பாராட்டி, நற்சான்றிதழ் வழங்கினார்கள். இவ்வழக்கின் புலன்விசாரணையை முடித்து எதிரி முகமது ஹனீபா 42/23 த.பெ.முகமதுயூசப் மீது பதியப்பட்ட வழக்கில் கடந்த 08.11.2021ந்தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

மேற்படி வழக்கில் புதுக்கோட்டை மாவட்ட Additional District Special Essential Commodities நீதிமன்றத்தின் நீதிபதி A.K.பாபுலால் விசாரணையை முடித்து, இன்று 28.02.2023ம்தேதி, எதிரி முகமது ஹனீபாவிற்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் மற்றும் ரூ.2,000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கில் அரசு வழக்கறிஞர் M.செந்தில்குமார் ஆஜரானார்.

இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து, குற்றவாளிக்கு விரைவாக தண்டனை பெற்று தந்த காந்திமார்க்கெட் காவல் ஆய்வாளர் மற்றும் வழக்கு விரைவில் முடிவடைய உறுதுணையாக இருந்த காந்திமார்க்கெட் காவல் ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் M.சத்தியப்பிரியா, வெகுவாக பாரட்டினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *