திருச்சி இபி ரோடு அண்ணா நகர் கோழி பண்ணை அருகில் ராஜேந்திரன் மகன் அமர்நாத் (28). இவர் காந்தி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழில் செய்து வருகிறார்.
இவருக்கு மாரியம்மாள் (24) என்பவருடன் திருமணமாகி 2 இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மனைவி தனது தம்பி ரகுநாத் உடன் பழக்கம் உள்ளதாகவும்,

செல்போனில் குறும் செய்திகள் பார்த்ததில் கோபமடைந்த அமர்நாத் மனைவியை வெட்டி விட்டதாக தானாக வாளுடன் கோட்டை காவல்நிலையத்தில் சரணடைந்தார். காயம் அடைந்த மாரியம்மாள் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn






Comments