திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் மாண்புமிகு மேயர் மு.அன்பழகன், தலைமையில்
பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாண்புமிகு மேயர் திரு. மு.அன்பழகன், அவர்கள் தலைமையில் இன்று (17.02.2025) திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் 18 கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள்.
இந்த கோரிக்கை மனுக்களில் மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு சாலை மேம்பாடு, சொத்துவரி பெயர் மாற்றம், சொத்துவரி குறைப்பு, பாதாளசாக்கடை இணைப்பு, சாலையோரகடைகள் ஆக்கிரமிப்புகள், வேலை உள்ளிட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. ஆக்கிரமிப்புகள் அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாதாளசாக்கடை மற்றும் குடிநீர் இணைப்பு உடனடியாக வழங்கவும், பொதுமக்களிடம் பெறப்படும் அனைத்து கோரிக்கை மனுக்கள்மீது உரிய தள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, முழுமையான நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு பதில் அனுப்ப வேண்டும் என்று அலுவலர்களுக்கு மாண்புமிகு மேயர் தெரிவித்தார்.
மாநகர மக்களின் குறைதீர்க்கும் நாள் கூட்ட நிகழ்ச்சியில் துணை மேயர் திருமதி. ஜி. திவ்யா, மண்டலத்தலைவர் திருமதி.த.துர்காதேவி, உதவி ஆணையர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கைகள் மேற்கொண்டார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
Comments