Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தீப்பெட்டி சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரித்த அமைச்சர்

திருச்சி தெற்கு மாவட்டம், மாநகரம், கிழக்கு தொகுதியில் இந்திய கூட்டணியின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் துரை வைகோ ஆதரித்து மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன், கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் தலைமையில் பாலக்கரை பகுதி கழகச் செயலாளர் டி.பி.எஸ்.எஸ்.ராஜுமுகமது முன்னிலையில் பாலக்கரை பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

வாக்கு சேகரிப்பில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில்…. மகளிர் உரிமைச் தொகை வழங்கும் திட்டம், உயர்கல்வி பயிழும் மாணவிகளுக்கு புதுமைப் பெண்கள் திட்டம், இலவச பேருந்து பயணம் தந்த விடியல் பயணம் என பல்வேறு திட்டங்களை தந்த நமது முதல்வரின் கரத்தை வலுப்படுத்தவும் வர இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் இந்திய கூட்டணி வெற்றி பெற்றவுடன் சுங்கச்சாவடிகள் அகற்றப்படவும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப் பெறவும், வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் கேஸ் விலை பாதியாக குறைக்கவும், நீட் தேர்வில் இருந்து நம் குழந்தைகள் விலக்கு பெற்றிடும் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் துணை மேயர் திவ்யா, கோட்டத் தலைவர் ஜெய நிர்மலா, வட்டக் கழக செயலாளர்கள் சேகர், நலங்கிள்ளி, சுரேஷ், தனுஸ்கோடி, சில்வியா, கருணாநிதி, கோவிந்தராஜ், எடிட்டன், ஞனசேகர், சீனிவாசன், மற்றும் மாவட்ட மாநகரக் கழக நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்திய கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *