திருச்சி செங்கதிர்சோலையைச் சேர்ந்தவர் சோலை சிவா ( எ ) சிவக்குமார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜிவ் காந்தி நகரில் செங்கதிர்சோலை மயானத்தில் உள்ள ஆக்கிர மிப்பை அரசு அதிகாரிகள் மூலம் மல்லியம்பத்து ஊராட்சித் சிவக்குமார் தலைவர் விக்னேஸ்வரன் எடுத்தார். இதற்கு சிவா உடந்தையாக இருந்ததாக கருதி அதே பகுதியைச் சேர்ந்த சிலர் சிவாவிடம் பிரச்னை செய்து வந்தனர்.
இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் நேற்று இரவு சிவா வீட்டிற்கு வந்து சிவாவை உருட்டுக் கட்டை யால் தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சிவா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சிவா மனைவி மைதிலி அளித்த புகாரின் பேரில் முன்னாள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பிரமுகரும் வாசன் எஸ்டேட் தொழில் அதிபருமான ரவி முருகையா மற்றும் திமுக ஒன்றியச் செயலாளர் மல்லியம்பத்து கதிர்வேல் கதிர்வேல், பிரபாகரன், தீபக் உட்பட 4 பேர் மீது சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர் .
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மாடக்குடி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இதே போல் ரியல் எஸ்டேட் பிரச்சனையில் ஒரு கொலை நடந்து உள்ளது. அதிலும் இவர்களுக்கு எதுவும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிகிறது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn







Comments